சனிக்கிழமை, நவம்பர் 16, 2024

அவசர தேவைக்கு திமுக வெளியிட்ட இலவச சேவை.. சென்னை மக்களுக்கு இனி கொண்டாட்டம் தான்

சீர்மிகு நகரம் என்ற திட்டத்தின் மூலம் பல்வேறு திட்ட பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. இத்தகைய திட்டங்கள் சென்னை மாநகராட்சியில் புதிய வேகத்துடன் செயல்பட்டு வருகிறது.

சீர்மிகு நகரம் என்பதற்கு பல்வேறு வகையான கோட்பாடுகள் உள்ளன. இயற்கை வளங்கள் ,வளர்ச்சி திட்டங்கள் ,மக்களின் விருப்பம் போன்ற பல கருத்துக்களை உள்ளடக்கியது சீர்மிகு நகரம் என்பதாகும் .

இதனடிப்படையில் தற்போது புதிதாக மேற்கொள்ளப்பட்ட திட்டம் மக்களை மிகவும் மகிழ்ச்சி அடைய செய்துள்ளது .சென்னை மாநகராட்சியில் சீர்மிகு திட்டத்தின் அடிப்படையில் இலவசமாக Wi-Fi திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

அதில் மாநகராட்சி ரிப்பன் கட்டிட வளாகத்தில் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. நகரின் பல்வேறு திட்டப் பணிகளை விரைந்து மேம்படுத்துவதே இந்த மையத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் சிறப்பம்சமாக நாற்பத்தி ஒன்பது ஸ்மார்ட் கம்பங்கள் நிறுவப்பட்டுள்ளது. இந்த கம்பங்கள் மூலமாக 30 நிமிடத்திற்கு இலவசமாக வைஃபை வசதியை பெற முடியும் என்று கூறப்படுகிறது.

இந்த வகை ஸ்மார்ட் கம்பங்கள் மழை அளவை கண்டறிதல், திடக் கழிவு அகற்றும் பணிகளை கண்காணிக்க கேமரா நிறுவுதல் மற்றும் அதனை சார்ந்த நடவடிக்கைகள் எடுத்தல் பேரிடர் காலத்தில் மக்களுக்கு தகவல்களை பரிமாறும் பயன்பாட்டிற்கு உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் பொதுமக்கள் இந்த ஸ்மார்ட் கம்பத்திலிருந்து இலவச வைஃபை வசதி பெற தங்களுடைய கைபேசி எண்ணை பதிவு செய்து ஓடிபி மூலம் இந்த சேவையை பெற்றுக்கொள்ள முடியும்.

- Advertisement -spot_img

Trending News