Cheran- Autograph: இயக்குனர் சேரன் ஹீரோவாக நடித்து இயக்கி இருந்த ஆட்டோகிராப் படத்தை அவ்வளவு எளிதில் யாராலும் மறந்துவிட முடியாது.
அந்த அளவுக்கு ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் மிக நெருக்கமாக அமைந்த கதை என்பதாலேயே அப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.
100 நாட்களைக் கடந்து ஓடிய அப்படம் வெளியாகி 21 வருடங்கள் நிறைவடைந்து விட்டது. ஒவ்வொரு பூக்களுமே, ஞாபகம் வருதே, மனசுக்குள்ளே காதல் வந்துச்சா போன்ற பாடல்கள் அனைத்தும் பட்டி தொட்டி எங்கும் பிரபலம்.
சேரனின் ஆட்டோகிராப் சர்ப்ரைஸ்
இப்போதும் கூட ஞாபகம் வருதே என்ற பாடல் பலரின் ப்ளே லிஸ்டில் இருக்கிறது. சேரனுடன் இணைந்து மல்லிகா, கோபிகா, சினேகா, கனிகா என முன்னணி நாயகிகள் அப்படத்தில் நடித்திருந்தனர்.
சேரனுக்கு மிகவும் ஸ்பெஷல் ஆக அமைந்த அப்படம் தற்போது மீண்டும் ரீ ரிலீஸ் ஆக இருக்கிறது. அதன் ட்ரைலர் ஏஐ தொழில்நுட்பத்தில் வித்தியாசமாக வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.
ரீ ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் ரசிகர்கள் அதை ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.