ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

யாஷ் போல் தலையில் குடுமியுடன் மிரட்டும் சேரன்.. அடுத்த படத்திற்கான நியூ லுக்

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருந்தவர் சேரன். இவரது இயக்கத்தில் வெளியான படங்கள் அனைத்துமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அந்தளவிற்கு கதையிலும் கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து தனது திறமையை படத்திற்கு படம் எடுத்திருப்பார்.

அதுவும் இவரது நடிப்பில் வெளியான ஆட்டோகிராப் திரைப்படம் இன்று வரை பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. அந்த அளவிற்கு ஒரு காலத்தில் சிறந்த இயக்குனராக வலம் வந்தார். சினிமாவில் தொடர்ந்து வெற்றி கொடுத்து வந்த சேரன் ஒரு கட்டத்திற்கு பிறகு தொடர்ந்து தோல்விப் படங்களைக் கொடுக்க ஆரம்பித்து.

அதனால் சேரனின் இயக்கும் படங்களுக்கு பெரிய அளவில் எந்த எதிர்பார்ப்பும் நிலவவில்லை அதனால் சினிமாவை விட்டு சிறிது காலம் விலகி இருந்தார் மேலும் இயக்குனராக தனது பயணத்தை நிறுத்தி சேரன் அதன் பிறகு நடிகராக தனது பயணத்தை தொடர்ந்தார்.

cheran
cheran

இவரது நடிப்பில் வெளியான ஒரு சில படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றதையடுத்து. தற்போது தொடர்ந்து பல படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். தற்போது கூட ஒரு குடும்ப பாங்கான படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது.

cheran
cheran

விஜய் மில்டன் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தற்போது சேரன் கே ஜி எஃப் பட கெட்டப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை அவரது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது இப்புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Trending News