வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

சேரனை கதறவிட்ட மகளின் காதல் கதை.. ராஜ்கிரணுக்கு நேர்ந்தது போல் நடந்த கொடுமை

Cheran – Rajkiran: நடிகர் ராஜ்கிரணின் வளர்ப்பு மகள் ஜீனத் ப்ரியா நேற்று தன்னுடைய காதல் கணவர் சின்னத்திரை நடிகர் முனீஸ் ராஜாவை பிரிந்து விட்டதாக வீடியோ வெளியிட்டு இருந்தார். இவர்கள் திருமணத்தின் போது ஏற்பட்ட சிக்கல்கள் எல்லோருக்கும் தெரியும். காதலை எதிர்த்த அப்பா முன்னாடி வாழ்ந்து காட்டுவேன் என்று சொல்லிவிட்டு இப்படி பிரிந்து இருப்பது ரொம்பவே ஆச்சரியமாக இருக்கிறது. தன்னுடைய மக்கள் திருமணம் செய்திருக்கும் முனீஸ் ராஜா நல்லவர் இல்லை என ராஜ்கிரண் சொன்னதும் நம் நினைவுக்கு வருகிறது.

சினிமாவில் காதலை ஆதரிக்கும் ராஜ்கிரண் போன்றவர்கள் தங்கள் சொந்த வாழ்க்கையில் காதலை எதிர்ப்பதற்கு முக்கிய காரணம் அவர்களுடைய பிரபலம் தான். நடிகரின் மகள் பணம் தேறும் என சிலர் சுற்றி வருகிறார்கள். அதனால் தான் இதுபோன்ற காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது. நடிகர் ராஜ்கிரணின் வாழ்க்கையில் நடந்த சம்பவம் போலவே இயக்குனர் சேரனுக்கும் நடந்து இருக்கிறது.

சேரனை கதறவிட்ட மகள்

ஆட்டோகிராப் என்னும் அழகான காதல் கதையை கொடுத்த சேரன் தன்னுடைய மகள் தாமினியின் காதலை ஏற்கவில்லை. இந்த காதல் கதை கோர்ட் வரைக்கும் சென்றது. சேரனின் இளைய மகள் தாமினி நடன இயக்குனர் சந்துரு என்பவரை காதலித்து இருக்கிறார். இவர்கள் இருவருக்கும் முகநூல் மூலமாக பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியிருக்கிறது.

Also Read:ராஜ் கிரண் தயாரிப்பாளராக கல்லா கட்டிய 5 படங்கள்.. ஹீரோ அவதாரம் எடுத்து கொண்டாடிய சில்வர் ஜூப்லி

முதலில் திருமணத்திற்கு ஓகே சொன்ன சேரன், பின்னர் காதலுக்கு சிவப்பு கொடி காட்டிவிட்டார். இதனால் கோபமடைந்த தாமினி வீட்டை விட்டு வெளியேறி சந்துரு வீட்டிற்கு சென்று விட்டார். தங்களுக்கு பாதுகாப்பு தரும் படியும், சேரன் தன்னுடைய காதலன் சந்துருவை கொலை செய்ய முயற்சிப்பதாகவும் காவல்துறையில் புகார் கொடுத்திருந்தார்.

இதற்கிடையில் சேரன் உடன் அமீர் மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் இணைந்து சந்துருவின் முழு தகவலையும் ஆதாரத்தோடு திரட்டினார்கள். 2 பெண்கள் இருக்கும் வீட்டில் இரண்டாவது பெண்ணை காதலித்து, அந்த பெண்ணிற்கு திருமண அழுத்தம் கொடுத்து, விட்டு விலகுவதற்கு பணம் வாங்குவது தான் சந்துருவின் முழு வேலையாகவே இருந்து இருக்கிறது.

பல முறை கவுன்சிலிங் கொடுக்கப்பட்டு நீதிமன்றத்தில் தாமினி பெற்றோருடன் வீட்டிற்கு செல்ல ஒப்புதல் அளித்தார். அந்த தினம் சேரன் மீடியா முன்பு கைகூப்பி கதறி அழுததை யாராலும் அவ்வளவு சீக்கிரம் மறந்து விட முடியாது. ராஜ்கிரணின் மக்கள் ஜீனத் ப்ரியாவும் சின்னத்திரை நடிகர் முனீஸ் ராஜாவை முகநூலில் சந்தித்து தான் காதலித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read:ராஜ்கிரனிடம் மன்னிப்பு கேட்டு கதறிய மகள்.. அதிர்ச்சி கிளப்பிய வீடியோ

Trending News