திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

மொத்த தமிழ் சினிமாவையும் கைக்குள் வைத்திருந்த சேட்.. எம்ஜிஆர், சிவாஜியவே மிரள விட்ட பணக்காரர்

இப்போது சந்து பொந்தில் எல்லாம் தயாரிப்பாளர்கள் படம் எடுக்குவேன் என பணப்பெட்டியுடன் கிளம்பி விடுகின்றனர். ஆனால் அந்த காலத்தில் மொத்த தமிழ் சினிமாவையும் ஒரு சேட்டு கைக்குள் வைத்து டான் போலவே வலம் வந்திருக்கிறார். இவரை பார்த்து புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மற்றும் நடிகர் திலகம் சிவாஜியே மிரண்டு போய் உள்ளனர்.

எம்ஜிஆரும் பத்மினியும் நடித்த மதுரை வீரன் படம் 1956 வெளிவந்தது. இந்த படத்தை லேனா செட்டியார் தயாரித்திருந்தார். இந்த படத்திற்கு தேவையான பெரிய பட்ஜெட் அரிராம் சேட் செய்திருந்தார். இவர் அந்த காலத்தில் மிகப்பெரிய பணக்காரராக இருந்து வந்தவர். இவரைப்பற்றி தெரியாமல் சிவாஜியை இவர் ஒரு நாடகத்தில் நடிக்க கூப்பிட்டதற்கு அதிக சம்பளம் கேட்டு இருக்கிறார்.

Also Read: எம்ஜிஆர் கொடுக்கத்தயங்கும் பொருளை பரிசாக பெற்ற நடிகர்.. வெளிவந்த 40 வருட ரகசியம்

அதன்படி அந்த நாடகத்தில் நடிக்க சென்ற சிவாஜி, அங்கு இவருடன் சரிசமமாக உட்கார்ந்து இருந்த தியாகராஜ பாகவதர், கலைவாணர் என் எஸ் கிருஷ்ணா போன்றவர்கள் மரியாதையாக பழகி வந்தனர். இதை பார்த்த சிவாஜி தன் தவறை உணர்ந்து இவர் பெரிய மனிதர் என்று சம்பளம் வாங்காமல் வேண்டாம் என்று பெருந்தன்மையோடு சொல்லிவிட்டார்.

சேட்டுக்கு கார்கள் என்றால் அதிக விருப்பம். அதனால் விலை உயர்ந்த கார்களை வாங்கி வைத்துள்ளார். அரிராம் சேட் சிறுவயதிலிருந்தே கார் மீது அளவு கடந்த காதல் கொண்டவர். இளைஞர் ஆன பிறகு பல மாதங்களில் பல நவீனமான கார்களை வாங்கி பயன்படுத்தினார். தன்னிடம் வேலை செய்பவர்கள் தன்னுடைய உறவினர்கள் மட்டுமல்லாமல் எல்லோருக்கும் வள்ளலாக அவர் இருந்திருக்கிறார்.

Also Read: ஒரே வருடத்தில் அதிக ஹிட் கொடுத்த நடிகர்.. சிவாஜியை ஓரம் கட்டிய சூப்பர் ஹீரோ

இவர் வைத்திருந்த கார்களை சிவாஜி பார்க்கும் பொழுது அதில் ஒரு காரை வைத்த கண் வாங்காமல் பார்த்ததால், அதை சேட்டு பார்த்து டிரைவரிடம் கண்ணசைவில் எடுத்து செல்ல சொன்னார். சிவாஜியின் வீட்டு வாசலில் நிறுத்தும்படி சொன்னார்.

சிவாஜி நிகழ்ச்சிகளை முடித்து சென்னை வீடு திரும்பு முன் வீட்டில் நின்றது. அந்த கார் அந்த அளவிற்கு சிவாஜியை அசர வைத்தது. இதே போல் எம்ஜிஆருக்கு நிறைய விஷயங்கள் செய்திருந்தாலும் எம்ஜிஆர் முதன் முதலில் தேர்தல் பிரச்சாரத்திற்கு தேவையான செலவுகள் பிரச்சார வாகனங்கள் அனைத்தும் இவரே வாங்கி கொடுத்தார் என்பது முக்கியமான விஷயம்.

Also Read: எம்ஜிஆரின் அந்தஸ்தை உயர்த்திய முதல் படம்.. கருணாநிதி வசனம் எழுதி கிடைத்த வெற்றி

Trending News