கொரானா காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது பலருக்கும் பலவிதமான சிக்கலுக்கு உள்ளாகினர். அதன் பிறகு படிப்படியாக சில ஊரடங்கு தளர்வு அரசாணை பிறப்பித்தது. ஊரடங்கு தளர்வு பிறகுதான் திரையரங்குகளில் படங்கள் திரையிடவும் அரசு ஒப்புதல் அளித்தது.
ஆனால் 100 சதவீத இருக்கைகள் பதிலாக 50 சதவீத இருக்கைகள் மட்டுமே அனுமதிக்க வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தனர்.
பொங்கலுக்கு விஜய்யின் மாஸ்டர் படம் திரைக்கு வரவிருப்பதால் நேரடியாக தமிழக முதல்வரை சந்தித்து திரையரங்கில் 100 சதவீத இருக்கைகள்ளுடன் ரசிகர்களை அனுமதிக்குமாறு கோரிக்கை வைத்திருந்தார்.
விஜய் எடுத்த இந்த முடிவிற்கு தியேட்டர் உரிமையாளர்களும், தியேட்டரில் பணியாற்றும் ஊழியர்களும் தங்களது ஆதரவை கொடுத்து வந்தனர். இருந்தாலும் ஒரு சில தினங்களுக்கு முன்பு 50 சதவீத இருக்கைகள் மட்டுமே அனுமதிக்கும் முடியுமென அரசு தரப்பில் இருந்து தகவல் வெளியானது.
ஆனால் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் விஜய்யின் கோரிக்கையை ஏற்ற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 100 சதவீத இருகைகளுடன் படத்தை திரையில் பார்க்கலாம் என தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமில்லாமல் நடிகர் சிம்பு நடித்த ஈஸ்வரன் படமும் பொங்கலுக்கு வெளிவர உள்ளது. இந்த படத்திற்கும் 100% இருக்கைகள் உடன் ரசிகர்கள் அனுமதிக்குமாறு அவரது சமூக வலைதள பக்கத்தில் ஒரு கடிதம் ஒன்றை பதிவு செய்து உள்ளார்.
சிம்பு சமூக வலைதளப் பக்கத்தில் அறிவிப்பதற்கு முன்பே நடிகர் விஜய் முதல்வரை நேரில் சந்தித்து 100% இருக்கைகளுடன் ரசிகர்களை படத்திற்கு அனுமதிக்குமாறு கோரிக்கை வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் சிம்பு வைத்த கோரிக்கைக்கு தான் முதல்வர் ஒப்புதல் வழங்கியுள்ளார் என்பது போன்ற வதந்திகளை பரப்பி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் தளபதி ரசிகர்கள் ஈஸ்வரன் படத்தையும் தன்னுடைய ரசிகர்கள் மாஸ்டர் படத்தை பார்க்கும்படி விளம்பரப்படுத்தி உள்ளார் சிம்பு.