முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை சிறப்புற வழி நடத்தியும், தமிழ்நாட்டை ஆட்சி செய்வதிலும் வெற்றி நடை போட்டு வருகிறார். இதனால் மக்களிடையே நன்மதிப்பையும் பெற்றுள்ளார்.
எனவே 5 ஆண்டு கால ஆட்சியே கவிழும் என்றும் எதிர்க்கட்சிகள் அதிகமாக எதிர்பார்த்தது, ஆனால் அந்த சோதனையும் வெற்றிகரமாக கடந்தார் எடப்பாடியார். மேலும் மத்திய அரசின் ஆதரவை கெட்டியாகப் பிடித்துக்கொண்டு தமிழ் நாட்டிற்கு தேவையான அனைத்து நலத்திட்டங்களையும் சிறப்புற செய்தார்.
அதுமட்டுமில்லாமல் அதிமுக கட்சியில் உட்பூசல்கள் எழுந்த நிலையில் அவை அனைத்தையும் தனியாளாக நின்று அவற்றை சரிசெய்து கட்சியில் பிரிவு ஏற்படாமல் தடுத்து ஒன்றுபடுத்தினார்.
தற்போது உலக நாடுகளையே அச்சுறுத்தி வந்த கொடிய அரக்கன், ‘கொரோனா வைரஸ்’, நம் தமிழ் நாட்டிலும் தலைவிரித்து ஆட தொடங்கியபோது, ஊரடங்கு திட்டத்தை அமல்படுத்துவது முதல் மருத்துவத் துறை, சுகாதாரத்துறை என அனைத்துத் துறைகளையும் தயார் படுத்தி அவற்றை எதிர்த்து போராடி அதில் வெற்றியும் பெற்றுள்ளார் என்றே சொல்லலாம்.
மேலும் தனக்கு இணையாக போட்டியிட தயாராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், தானாகவே முன்வந்து முதல்வர் வேட்பாளருக்கு எடப்பாடி பழனிசாமி தான் என்று அறிவித்தார். அதேபோல் சசிகலாவின் வரவு அதிமுக ஆட்சியை பெரிதும் பாதிக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில், சசிகலாவும் தானாகவே முன்வந்து அரசியலில் ஈடுபட தயாராக இல்லை என்று அறிவித்துவிட்டார்.
அதை தொடர்ந்து ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதாக இருந்தது அவரும் சில முக்கிய காரணத்தினால் நான் அரசியலுக்கு வரவில்லை என்று மறுத்துவிட்டார். மேலும் மிக முக்கியமாக அதிமுகவின் கூட்டணி கட்சியான பாஜக, எடப்பாடி எடுக்கும் அனைத்து முடிவுக்கும் முழு ஒத்துழைப்பு தந்து வருகிறது. எடப்பாடியின் முடிவே பாஜகவின் இறுதி முடிவு என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
இதுபோன்று எடப்பாடிக்கு வருகின்ற அனைத்து சோதனைகளும் தற்போது தானாகவே விலகி உள்ளதால், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு வருகின்ற தேர்தலில் வெற்றி வியூகம் அதிகமாக காணப்படுகிறது. எனவே அடுத்த முதல்வராக எடப்பாடி பழனிசாமி அவர்கள் பதவி ஏற்க அதிக வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரம் தெரிவிக்கிறது.