தமிழகத்தில் எடப்பாடி கே பழனிசாமி அவர்களின் தலைமையிலான அதிமுக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இவரது அசத்தலான திட்டங்களால் தமிழ்நாடு தற்போது இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களுக்கு முன்னோடி மாநிலமாக மாறியுள்ளது.
அதேபோல் மறைந்த முதல்வர் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் சென்னை மாநகரத்தை மேம்படுத்துவதற்காக பல்வேறு சிறப்பான உட்கட்டமைப்பு திட்டங்களை வகுத்து செயல்படுத்தினார். அந்த வகையில் புரட்சித்தலைவியின் தலைமையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும், மக்களின் பயண நேரத்தை குறைப்பதற்காகவும் உருவாக்கப்பட்ட திட்டம் தான் மெட்ரோ ரயில் திட்டம்.
தற்போது 5 ஆண்டுகள் மெட்ரோ சேவையை வெற்றிகரமாக முடித்து ஆறாம் ஆண்டில் தனது சேவையைத் தொடங்குகிறது. அதேபோல் இதுவரை 7.25 கோடி மக்கள் மெட்ரோ ரயிலில் பயணித்து உள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் மெட்ரோ ரயில் கட்டணத்தை அதிரடியாக குறைந்துள்ளதாகவும், இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.
மேலும் இந்த உத்தரவின்படி ஜீரோ முதல் 2 கிலோ மீட்டர் வரை கட்டணம் ரூபாய் 10 என்றும், 2 முதல் 5 கிலோ மீட்டர் வரை கட்டணம் ரூபாய் 20 என்றும் பழைய கட்டணமே மாற்றமில்லாமல் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் புதிய கட்டணத்தின் படி 4 முதல் 12 கிலோ மீட்டர் வரை 40 ரூபாய்க்கு பதிலாக ரூபாய் 30 வசூலிக்கப்படும் என்றும், 12 முதல் 21 கிலோ மீட்டர் வரை 50 ரூபாய்க்கு பதிலாக 40 ரூபாய் வசூலிக்கப்படும் என்றும், 21 முதல் 32 கிலோ மீட்டர் வரை பழைய கட்டணம் 70 ரூபாய்க்கு பதிலாக ரூபாய் 50 வசூலிக்கப்படும் என்றும் முதல்வரின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமில்லாமல் ஞாயிற்றுக்கிழமைகளிலும் பொது விடுமுறை நாட்களிலும் கட்டணத்தில் இருந்து 50 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த அறிவிப்பால் மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய ஆசைப்படும் சாமானிய மக்கள் மகிழ்ச்சியில் திளைத்து வருவதோடு, தங்களது நெஞ்சார்ந்த நன்றியை முதல்வருக்கு தெரிவித்து வருகின்றனர்.