சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

மதுரையில் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்ட தமிழக முதல்வர்.. அலையென திரண்ட மக்கள் கூட்டம்!

இன்னும் 10 நாட்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் அனைத்து கட்சியினரும் தங்கள் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டும் வகையில் தீவிரமாக பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்தவகையில் தமிழக முதல்வரும், அதிமுக கட்சியின் முதல்வர் வேட்பாளருமான எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் இன்று மதுரையில் சூறாவளி சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

அப்போது திரளான மக்கள் வெள்ளம்போல் சூழ்ந்து தமிழக முதல்வருக்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர். எனவே மதுரை மாநகரமே மக்கள் வெள்ளத்தில் அலை மோதியதை கண்ட மற்ற கட்சியினர் கதிகலங்கிப் போனார்கள்.

அதுமட்டுமில்லாமல் தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் செல்லும் இடமெல்லாம் பெண்கள், குழந்தைகள், விவசாயிகள் என பலதரப்பட்டவர்களும் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

EPS-madurai

குறிப்பாக தேர்தல் அறிக்கையாக அதிமுக சார்பில் வெளியிடப்பட்ட அனைத்து அறிக்கைகளும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் இன்று தமிழக முதல்வர் மதுரையில் பிரச்சாரம் செய்தபோது மதுரை மாவட்டம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் அனைத்தும் அதிமுக வசமே உள்ளது என்பதை பறைசாற்றும் வகையில் மக்கள் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

Trending News