திங்கட்கிழமை, நவம்பர் 18, 2024

டெல்லியில் பிரதமரை சந்தித்ததை குறித்து விளக்கம் அளித்த தமிழக முதல்வர்!

தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் இன்று பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்தித்துப் பேச டெல்லி விரைந்துள்ளார்.

இவர் டெல்லி செல்வதற்கு மூன்று முக்கிய காரணங்கள் உள்ளது. முதலில் காவிரி, குண்டாறு இணைப்புத் திட்டத்தை தொடங்க வேண்டும் என்று பிரதமரிடம் நிதி உதவி கோர உள்ளார்.

அதுமட்டுமில்லாமல் அதிமுக மற்றும் பாஜக கூட்டணியையும் உறுதிப்படுத்தவும், மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் நினைவிட கட்டிடப் பணிகள் முடிவடைந்த நிலையில், அதற்கான திறப்பு விழாவிற்கு பிரதமரை அழைக்க தமிழக முதல்வர் இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார்.

எனவே டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், தமிழகத்தில் புதிய நலத்திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டவும், வண்ணாரப்பேட்டை, விம்கோ நகர் மெட்ரோ ரயில் சேவை தொடக்க விழாவிற்கு பிரதமருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும் தமிழகத்தில் புயலினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிதி உதவி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை பரிசீலனை செய்வதாக பிரதமர் தெரிவித்துள்ளார் என்று தமிழக முதல்வர் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

edappadi-3
- Advertisement -spot_img

Trending News