திங்கட்கிழமை, ஜனவரி 6, 2025

தமிழகத்தில் இ-ஸ்மார்ட் பைக் அறிமுகப்படுத்திய தமிழக முதல்வர்.. குவியும் பாராட்டுக்கள்!

தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் அதிமுக அரசை தமிழகத்தில் செவ்வனே செயல்படுத்தி வருகிறார். மேலும் தமிழகத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லும் நோக்கத்தில் பல்வேறு நல திட்டங்களையும் வகுத்து செயல்படுத்துள்ளார்.

அதற்கு சான்றாக தற்போது @chennaicorp சார்பில் சீர்மிகு நகர திட்டநிதியின் கீழ் சென்னை,காமராஜ் சாலையில் 500 இ-மிதிவண்டிகள்(E-Smart Bike) மற்றும் 500 அடுத்த தலைமுறைக்கான மிதிவண்டிகளை மக்கள் பயன்பாட்டிற்காக வழங்கும் திட்டத்தை கொடியசைத்து தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் துவங்கி வைத்துள்ளார்.

தற்போது 500 சாதாரண சைக்கிள்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் ஸ்மால் பைக் நிறுவனம் மூலம் இன்னும் இ-பைக் மற்றும் அடுத்த தலைமுறை சைக்கிள்களை அறிமுகம் செய்ய சென்னை மாநகராட்சி முடிவு செய்திருக்கிறது.

குறிப்பாக இவைகளை ஸ்மால் பைக் நிறுவனம் நிறுவனம் பேட்டரி மூலம் இயங்கும் புதிய 500 சைக்கிள்கள் மற்றும் செயின் இல்லாமல் 500 அடுத்த தலைமுறை சைக்கிள்களை சென்னை மக்கள் பயன்பாட்டிற்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

e-smart-bike

மேலும் சென்னையில் மொத்தம் 1500 சைக்கிள்கள் பயன்பாட்டில் இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே ஏற்கனவே இருக்கும் சைக்கிள்களுக்கு பழைய கட்டணமும், இ-ஸ்மார்ட் சைக்கிள்களுக்கு புதிய கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.

ஆகையால் இந்த வசதிகளை மக்கள் எளிதில் பயன்படுத்துவதற்கு சென்னையில் 150 சைக்கிள் நிலையம் அமைக்கப்பட உள்ளது. அது மட்டுமில்லாமல் ஒவ்வொரு சைக்கிள் நிலையங்களிலும் அனைத்து சைக்கிள்களும் இருக்கும் வகையில் அமைக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Trending News