புதன்கிழமை, ஜனவரி 8, 2025

110 விதியின் கீழ் மக்களுக்கு தேவையான திட்டங்களையும் செயல்படுத்தியவர் தமிழக முதல்வர்.. அமைச்சர் பெருமிதம்!

தமிழகத்தின் மறைந்த முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் வழியில் சிறப்பாக செயல்பட்டு வரும் தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள், மின்னல் வேகத்தில் மக்களுக்கான நலத்திட்டங்களை செய்து வருவதாக வருவாய் துறை அமைச்சர் ஆர்பி உதயகுமார் பெருமிதத்துடன் பேசியுள்ளார்.

இன்று ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் ஆர் பி உதயகுமார், அரசியல் வரலாற்றில் முதல் முதலாக ராமநாதபுரம் மாவட்டத்தில் சுமார் ரூ. 30 கோடியே 52 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு அம்மாவின் கனவு தொடர்ந்து நிறைவேறி வருகிறது.

RP-Udayakumar

அதுமட்டுமில்லாமல் 110 விதியின் கீழ் மக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் செயல்படுத்தி காட்டுகிறார்.

மேலும் விவசாயிகளின் கடன் சுமையை குறைப்பதற்காக, பயிர் கடன் தள்ளுபடி மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு என விவசாயிகளின் முதல்வராக தமிழக முதல்வர் செயலாற்றி வருகிறார் என்று வருவாய் துறை அமைச்சர் ஆர்பி உதயகுமார் தனது உரையின் மூலம் தெரிவித்துள்ளார்.

Trending News