புதன்கிழமை, ஜனவரி 8, 2025

சிவந்தி ஆதித்தனார் சிலைக்கு மரியாதை செலுத்திய தமிழக முதல்வர்.!

தமிழகத்தில் வருகின்ற சட்டமன்றத் தேர்தலையொட்டி ஒவ்வொரு கட்சியினரும் அனல் பறக்கும் விதமாக செயல்பட்டு வருகின்றனர். அந்தவகையில் தமிழக முதல்வர் எடப்பாடியார் தனது கட்சியான அதிமுகவிற்காக விறுவிறுப்பாக பிரச்சாரம் செய்து வருகிறார்.

தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூரில் முதல்வர் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூரில் சிவந்தி ஆதித்தனார் சிலைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதாகவும் சொல்லப்படுகிறது.

அதாவது தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று பிரச்சாரத்தில் தமிழக முதல்வர் ஈடுபட்டாராம். அப்போது திருச்செந்தூரின் மகளிர் குழு கூட்டத்தில் பங்கேற்று பேசியதோடு, அதற்கு முன்பாக உள்ள தினத்தந்தி குழுமத்தின் அதிபர் மறைந்த பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் மணிமண்டபத்தில் உள்ள அவருடைய திருவுருவச் சிலைக்கு மரியாதை செலுத்தி உள்ளாராம் முதல்வர்.

அதன்பிறகுதான், பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்ற முதல்வர், தமிழர் தந்தை சிபா ஆதித்தனாரின் புதல்வரும், தினத்தந்தி குழுமத்தின் அதிபருமான மறைந்த பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் திருஉருவ சிலைக்கு தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார்.

மேலும் இந்த நிகழ்வின் போது செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினரான சண்முகநாதன் ஆகியோர் முதல்வருடன் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.

Trending News