திங்கட்கிழமை, நவம்பர் 18, 2024

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது போராடிய இளைஞர்களுக்கு பரிசளித்த தமிழக முதல்வர்.. அதிரடி அறிவிப்பை கொண்டாடும் இளசுகள்!

தமிழகத்தில் எடப்பாடி கே பழனிசாமியின் தலைமையிலான அதிமுக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

மேலும் பல நலத் திட்டங்களால் முதல்வர் எடப்பாடியார் தமிழகத்தை பட்டை தீட்டிய தோடு, தமிழ்நாட்டில் உள்ள மக்கள் அனைவருக்கும் நல்லது எது என்று தேடி தேடி செய்கிறார்.

அந்த வகையில் தற்போது எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் ஜல்லிக்கட்டு நடத்த கோரி போராடிய அனைத்து இளைஞர்களுக்கும் சிறப்பு பரிசு ஒன்றை அளித்துள்ளார்.

அதாவது ஜல்லிக்கட்டு நடத்த கூடாது என்று மத்திய அரசு உத்தரவு போட்டதை எதிர்த்து, பல இளைஞர்கள் தமிழ்நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதே போல் பல்வேறு இடங்களில் கலவரங்கள் நடந்தன. அப்போது நடைபெற்ற பிரச்சினையின் போது பல இளைஞர்களின் மீது வழக்குகள் போடப்பட்டு இருந்தது.

தற்போது ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் வாபஸ் பெறப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல், சட்டவல்லுனர்களை ஆலோசித்து வழக்குகளை வாபஸ் வாங்கும் என்றும், காவலர்களை தாக்கிய வழக்கு மற்றும் வாகனங்களை தீயிட்டுக் கொளுத்திய வழக்கு ஆகிய சில குற்ற வழக்குகளை தவிர மற்றவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகள் அனைத்தும் திரும்பப் பெறப்படும் என்று முதல்வர் எடப்பாடியார் அதிரடியாக அறிவித்துள்ளார்.

எனவே, தமிழக முதல்வரின் இந்த புதிய அறிவிப்பை கேட்ட மக்களும், இளைஞர்களும், அவர்களது பெற்றோர்களும் மகிழ்ச்சியில் திளைத்து வருவதோடு, தங்களது மனமார்ந்த நன்றியை முதல்வருக்கு தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -spot_img

Trending News