புதன்கிழமை, ஜனவரி 8, 2025

எதிர்க்கட்சிக்கு இனி மனு வாங்கும் வேலை கூட இல்லை.. முதல்வரின் அதிரடி பிரச்சாரம்!

தமிழகத்தில் வருகின்ற மே மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதற்காக ஒவ்வொரு கட்சியினரும் தங்களது கட்சிக்கான பிரசாரத்தில் முழுமூச்சாக ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் ஊர் ஊராக சென்று வளைத்து வளைத்து தனது கட்சியான அதிமுகவிற்காக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்து வருகிறாராம்.

அப்போது பேசிய எடப்பாடியார், ‘எதிர் கட்சி 50 ஆண்டுகளுக்கு முன்பு செயல்பட்டு வந்த புகார் பெட்டி போன்ற விஷயங்களை தற்போது மேற்கொண்டு பிரச்சாரம் செய்து வருகின்றனர். ஆனால் தற்போது அதற்கு வழியில்லை.

ஏனென்றால் அம்மாவின் வழிவந்த அதிமுகவின் ஆட்சியில் நாங்கள் நவீனமாக சிந்தித்து 1100 என்ற புகார் எண்னை மக்களுக்கு அறிமுகப்படுத்தியதோடு வீட்டிலிருந்து மக்கள் இந்த எண்ணினை தொடர்பு கொண்டு, தங்களது குறைபாடுகளை தெரிவிக்கும் மக்களின் குறைகள் உடனுக்குடன் தீர்த்து வைக்கப்படும்’ என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் தான் செப்டம்பர் மாதமே 1100 குறை தீர்ப்பு எண் பற்றிய அறிவிப்பை சட்டமன்றத்தில் மேற்கொண்டதாகவும், அதற்குப்பிறகுதான் ஸ்டாலின் இந்த புகார் பெட்டி என்கின்ற நாடகத்தை நடத்தி வருவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

edappadi-jayalalitha
edappadi-jayalalitha

மேலும் இந்தத் திட்டத்தை சென்ற வாரம் துவக்கி விட்டதாகவு, இனிமேல் திமுகவிற்கு மனு வாங்கும் வேலை கூட இல்லை என்றும் காட்டமாக பேசியுள்ளார் எடப்பாடியார்.

Trending News