புதன்கிழமை, ஜனவரி 22, 2025

முழு ஹீரோயினாக மாறிய கமலின் ரீல் மகள்.. அரைகுறை ஆடையில் மெர்சலான புகைப்படம்

சின்னத்திரை நடிகைகள் தொடங்கி பெரிய திரை நடிகைகள் வரை அனைவரும் கிளாமராக போட்டோ ஷூட் நடத்தி அதை சோசியல் மீடியாவில் வெளியிட்டு வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அந்த புகைப்படங்கள் யாவும் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதும் உண்டு.

அந்த வகையில் நாம் குழந்தை நட்சத்திரமாக திரையில் பார்த்த எஸ்தர் அனில் விதவிதமான கிளாமர் போட்டோ சூட்டுகள் நடத்தி அதை சோசியல் மீடியாவில் ஷேர் செய்து வருகிறார். மலையாளத்தில் மிகப்பெரிய ஹிட்டடித்த திரிஷ்யம் படத்தில் இவர் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். அந்த படத்திற்காக கேரளா அரசின் விருதையும் இவர் பெற்றுள்ளார்.

அதைத் தொடர்ந்து அப்படம் பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வெளியானது. அதில் கமல்ஹாசனுக்கு எஸ்தர் இரண்டாவது மகளாக நடித்திருந்தார். இப்படம் மலையாளத்தை போலவே தமிழிலும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதனால் அவரின் முகம் நமக்கு மிகவும் பரிச்சயமான முகம் ஆகும்.

அதில் நாம் மிகவும் சிறு பெண்ணாக பார்த்த எஸ்தர் தற்போது மளமளவென வளர்ந்து ஹீரோயின் போல் மாறியுள்ளார். அவரின் இந்த கிளாமர் போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் அவரா இவர் என்று ஆச்சரியத்தில் வாய் பிளக்கின்றனர்.

அந்த அளவுக்கு எஸ்தர் முற்றிலும் ஹீரோயின் போன்று மாறியுள்ளார். தற்போது இவர் கருப்பு நிற உடையில் தொடையழகி ரம்பாவை போல தன் கால் அழகை காட்டியபடி காரில் ஒய்யாரமாக அமர்ந்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் தற்போது இளைஞர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது இதை பார்க்கும் பலரும் ஹீரோயின்களுக்கே டப் கொடுப்பாங்க போல என்று கமெண்ட் கூறுகின்றனர். இதைப் போன்று தமிழில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அனிகா சுரேந்திரன் தன்னுடைய கிளாமர் போட்டோக்களை அடிக்கடி வெளியிட்டு வருகிறார்.

estheranil
estheranil

Trending News