வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

பாக்யா ஒரு ராட்சசி.. கோபியுடன் சேர்ந்து கூட்டு களவாணியான வாரிசு

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் 25 வருடங்களாக சேர்ந்து வாழ்ந்த கணவர் தனக்கு துரோகம் செய்து விட்டார் என தெரிந்ததும் பாக்யா துணிச்சலான முடிவெடுத்து அவரை விவாகரத்து செய்து விட்டார். விவாகரத்திற்கு பிறகு வீட்டை விட்டு வெளியேறிய கோபி, ஹோட்டலில் தங்கி இருக்கிறார்.

கோபி இப்படி குடும்பத்தை விட்டு நடுரோட்டில் வந்ததற்கு தான்தான் காரணம் என ஒருபுறம் ராதிகா குற்ற உணர்ச்சியில் தவிக்கிறார். அந்த சமயம் பார்த்து ராதிகாவின் அம்மா, பாக்கியலட்சுமி ஒரு ராட்சசி. கோபியை இப்படி எல்லாம் செய்ததால்தான் அவர் உன்னுடன் வாழ விரும்பி இருக்கிறார் என்று ராதிகாவிற்கு தூண்டி விடுகிறார்.

Also Read: 50 வயதிலும் கள்ளக்காதலுக்காக சாகத் துணிந்த கோபி

இதன்பிறகு ராதிகா கோபியை ஏற்றுக்கொண்டு அவருடன் சேர்ந்து வாழும் எண்ணம் ஏற்படுகிறது. மறுபுறம் பாக்யா குடும்ப செலவிற்காகவும் இனியாவின் கல்வி கட்டணத்திற்காகவும் பணத்தை எப்படியாவது சம்பாதிக்க வேண்டும் என்று மூளையைக் கசக்கிக் கொண்டிருக்கிறார்.

இனியா தனக்கு கல்வி கட்டணம் உடனடியாக செலுத்த வேண்டும் என பாக்யாவிடம் சொன்னதால், 5 ஆயிரத்தை மட்டுமே கையில் வைத்திருக்கும் பாக்யா என்ன செய்வது என முழிக்கிறார். கோபி இனியாவின் பள்ளிக்கு சென்று பணத்தை செலுத்தி விடுகிறார்.

Also Read: பெங்களூர் தக்காளி போல் மாறிய பிரியா பவானி சங்கர்

அப்போது இனியாவை சந்தித்த கோபி, அவரிடம் உருகி உருகி பாசமாக பேசுகிறார். கூட்டுக் களவாணியான இனியாவும் கோபி செய்த தவறை எல்லாம் மறந்துவிட்டு, வீட்டிலேயே இருக்க பிடிக்கவில்லை என அழுகிறார்.

‘படிப்பில் மட்டும் கவனம் செலுத்து, சீக்கிரம் நாம் இருவரும் சேர்ந்து ஒரே வீட்டில் இருக்கலாம்’ என்று கோபி இனியாவுக்கு நம்பிக்கை அளித்து பள்ளியிலிருந்து கிளம்புகிறார். இது மட்டுமின்றி எழில் புதிதாக எடுக்கவிருக்கும் படத்திற்காக தயாரிப்பாளரை சந்தித்து பேசுகிறார்.

Also Read: சூடுபிடிக்கும் சக்களத்தி சண்டை, குளிர்காயும் கோபி

அப்போது படத்திற்கு கதை மட்டுமல்ல கதையில் ஜீவனும் இருக்கவேண்டும் என எழில் தயாரிப்பாளரிடம் சொல்ல, அதன்பிறகு இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு தயாரிப்பாளரின் கோபத்தை எழில் சம்பாதித்து விடுகிறார். இதன் பிறகு எழில் இனி வேறு ஒரு தயாரிப்பாளரை தேட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்த சூழலில் எழிலுக்கு எந்தவிதமான பணக் கஷ்டத்தையும் காட்டக்கூடாது. அவர் நல்லபடியாக படத்தை எடுத்து முடிக்க வேண்டுமென பாக்யா நினைக்கிறார்.

Trending News