திங்கட்கிழமை, நவம்பர் 18, 2024

நேரலையில் ஜிப்பை கழட்ட சொன்ன ரசிகர்.. அசிங்கப்படுத்திய சின்மயி

வைரமுத்து என்று சொன்னாலே அனைவருக்கும் ஞாபகத்திற்கு வருவது அவர் வாங்கிய விருதுகளோ அல்லது எழுதிய பாடல்களே இல்லை. பாடகி சின்மயி மட்டும்தான். அந்த அளவுக்கு வைரமுத்துவை டேமேஜ் செய்துள்ளார்.

வைரமுத்து தன்னிடம் தவறாக நடந்து கொள்ள முற்பட்டதாகவும், அதை செய்யவே இல்லை என மறுக்கிறார் என்றும் தொடர்ந்து வைரமுத்துவின் முகத்திரையை கிழித்து காட்ட ஏதாவது ஒரு வகையில் அவரை நோண்டிக் கொண்டே இருக்கிறார்.

அதுமட்டுமில்லாமல் சமூக வலைதளங்களில் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு முதலில் குரல் கொடுப்பவராகவும் சின்மயி உள்ளார். வேலைக்குச் செல்லும் இடங்களில் பெண்கள் கஷ்டப்படுவதை அவரிடம் பகிர்ந்து வருகின்றனர்.

அடிப்படையில் பாடகியான சின்மயி அவ்வப்போது தன்னுடைய சமூக வலைதளப் பக்கங்களில் நேரலையில் ரசிகர்களுக்கு தரிசனம் கொடுப்பார். இதை இப்போது எல்லா பிரபலங்களும் செய்யத் தொடங்கி விட்டனர்.

அப்படி சமீபத்தில் சின்மயி அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேரலையில் காட்சி அளித்துள்ளார். அந்த நேரத்தில் ரசிகர் ஒருவர் எதிர்பாராதவிதமாக சின்மயிடம், ஜிப்பை கழட்டுமாறு கேட்டுள்ளார்.

சும்மாவே இந்த மாதிரி பேசும் ஆண்களை விட மாட்டார் சின்மயி. அப்படி இருக்கையில் நேரலையில் கேவலமாக பேசினால் விட்டு விடுவாரா. தன்னுடைய பங்கிற்கு அதை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து, என்னைப் போன்ற பிரபலத்திடமே இந்த மாதிரி பேசுகிறார் என்றால் சாதாரண பெண்கள் பாவம்தான், இப்படி பண்ணினால் பெண்ணியத்தை எப்படி எதிர்பார்ப்பது என வெளுத்து வாங்கியுள்ளார்.

chinmayi-live-screenshot
chinmayi-live-screenshot
- Advertisement -spot_img

Trending News