நடிகை சின்மயி இணையதளங்களில் எப்போதுமே சர்ச்சையான கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். அதுமட்டுமல்லாமல் ரசிகர்களும் அவரை எப்போதுமே வம்புக்கிழுத்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
கீழ்த்தரமான வார்த்தைகளை பயன்படுத்தி சின்மயியை திட்டுவதை பொழுதுபோக்காக நினைத்துக் கொண்டிருக்கும் ரசிகர்களை அவ்வப்போது பொது மக்களுக்கு அடையாளம் காட்டி வருகிறார்.
இருந்தாலும் சின்மயி என்ன சொன்னாலும் அதை மக்கள் கண்டு கொள்வதாக இல்லை. அதற்கு காரணம் பாடலாசிரியர் வைரமுத்து தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக இவர் கூறியது தான்.
இருந்தாலும் தன்னுடைய சமூக வலைதள பக்கம் வாயிலாக இளம் பெண்கள் பலரும் பாதிக்கப்படுவதை சுட்டிக்காட்டி அதற்கு எந்த வகையில் உதவி செய்ய முடியுமோ அதை செய்து வருகிறார் சின்மயி.
இணையதளங்களில் சின்மயிடம் தவறாக நடந்து கொள்ளும் சிலர் இருக்கத்தான் செய்கின்றனர். அந்த வகையில் சமீபத்தில் ஒரு நபர் சின்மயிக்கு தான் தனிமையில் சந்தோஷமாக இருக்கும் புகைப்படத்தை அனுப்பியுள்ளார்.
இதைப்பார்த்து டென்ஷனான சின்மயி, பெண்களின் அனுமதி இல்லாமல் அவர்களின் வருங்கால கணவர்கள் போல அந்த மாதிரி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அனுப்பி இருக்கிறார்கள், இதை நான் கேட்க வேண்டுமென எதிர்பார்க்கிறார்கள் எனவும் பதிலடி கொடுத்துள்ளார். சின்மயிக்கு மட்டும்தான் தொடர்ந்து இதுபோன்ற டார்ச்சல்கள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.