தமிழ் சினிமாவில் பொருத்தவரை ஒரு சில நடிகர்கள் மற்றும் காமெடி நடிகர்கள் மட்டுமே நிலையாக இடம் கொடுத்து இருப்பார்கள். அப்படி ஒரு காலத்தில் சினிமாவில் நிலையான இடம் எடுத்தவர் தான் நடிகர் வடிவேலு.
வடிவேலு சினிமாவின் ஆரம்ப காலத்தில் தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி ஒரு சில கதாபாத்திரங்களில் நடித்தார் காலப்போக்கில் இவருக்கென தனி ரசிகர்கள் உருவாக அதன் பிறகு முழுநேர காமெடி களத்தில் குதித்து வெற்றி பெற்றார்.
இவரது காமெடியில் வெளியான அனைத்து காட்சிகளுமே ரசிகர்களால் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது அந்த அளவிற்கு காமெடி காட்சியில் கலக்கியுள்ளார் வடிவேலு.
வடிவேலு சினிமாவின் ஆரம்ப காலத்தில் இவருக்கு பெயர் வாங்கி கொடுத்த திரைப்படம் சின்ன கவுண்டர். இப்படத்தில் வடிவேலுக்கு ஒரு நாளைக்கு 250 ரூபாய் சம்பளமாக கொடுத்துள்ளனர்.
அதுமட்டுமில்லாமல் படப்பிடிப்பு காட்சிகள் முடிந்தவுடன் சூட்டிங் ஸ்பாட்டில் விஜயகாந்திற்கு எப்போதும் வடிவேலு தான் கால் அமுக்கி விடுவார் எனக் நடிகர் தியாகு பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இவர்கள் இருவரும் சினிமாவில் ஒன்றாக பணியாற்றி வந்தனர், ஆனால் காலப்போக்கில் இவர்களுக்கு இடையே ஒரு சில பிரச்சனைகளால் பெரிதளவில் படங்களில் இணையவில்லை.
ஆனால் வடிவேலு ஏதோ ஒரு சில படங்களில் மட்டும் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக மெர்சல் திரைப்படம் வெளியானது. விஜயகாந்த் சினிமா விட்டு நிரந்தரமாக விலகி விட்டார்.