இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் 1991ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சின்னதம்பி. இதில் நடிகர் பிரபு மற்றும் குஷ்பூ இணைந்து நடித்துள்ளனர். மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்ற இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தினை எடுக்குமாறு இயக்குனர் அவர்களுக்கு ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
உடல் எடையை அதிகரித்து இருந்த நடிகை குஷ்பு சில நாட்களாக தன்னுடைய எடையை குறைத்து 18 வயது பெண்ணை போல் உள்ளார். மாடர்ன் உடை அணிந்து இவர் வெளியிடும் புகைப்படம் தற்பொழுது வைரலாகி வருகிறது.
இது ஒருபுறமிருக்க நடிகர் பிரபு தன்னுடைய உடல் எடையை குறைத்துள்ளார். இதனைக் கண்ட ரசிகர் ஒருவர் இருவருடைய புகைப்படத்தையும் ஷேர் செய்து இயக்குனர் பி.வாசு சின்னதம்பி 2 படத்தை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

அதற்கு நடிகை குஷ்பூ சம்மதம் தெரிவிப்பது போல் எமோஜி போட்டு தனது ரியாக்சனை தெரிவித்துள்ளார். சினிமாவை கலக்கிய பிரபு குஷ்பு ஜோடி மீண்டும் இணையுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்து வருகிறது.
