புதன்கிழமை, ஜனவரி 15, 2025

காமெடி நடிகர் சின்னி ஜெயந்த் இயக்குனரா? மூன்று படங்கள் டைரக்ட் பண்ணிருக்காரு!

சினிமாவில் பிரபல காமெடி நடிகராக வலம் வந்த சின்னி ஜெயந்த் இயக்குனராகவும் மூன்று படங்களை இயக்கியுள்ளார் என்ற தகவல் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

1984 ஆம் ஆண்டு ரஜினி நடிப்பில் மகேந்திரன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் கை கொடுக்கும் கை. இந்த படத்தில் மனநலம் குன்றியவர் போன்ற வேடத்தில் நடித்தவர் தான் சின்னி ஜெயந்த்.

அதுமட்டுமில்லாமல் பண்ணையார் ரேவதியை கசமுசா பண்ணுவதற்கும் இவர்தான் உதவியாக இருப்பார். இப்படி ஆங்காங்கே சில படங்களில் முகம் காட்டிக் கொண்டிருந்த சின்னி ஜெயந்த் ஒரு கட்டத்தில் கண்ணெதிரே தோன்றினாள், இதயம் போன்ற படங்களின் மூலம் ரசிகர்களின் இதயத்தில் நுழைந்தார்.

அது மட்டுமில்லாமல் அவர் வளர்ந்து வந்த காலகட்டங்களில் வெளியான அனைத்து படங்களிலும் குறைந்தது ஒரு காட்சியாவது நடித்து விடுவார். அந்தளவுக்கு பரபரப்பாக நடிகராக இருந்த சின்னி ஜெயந்த் இதுவரை மூன்று படங்கள் இயக்கியுள்ளார்.

2000 ஆண்டு உனக்காக மட்டும் என்ற படத்தின் மூலம் இயக்குனரானார். புதுமுகங்கள் நடித்திருந்த அந்த படம் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. அதனைத் தொடர்ந்து மறைந்த நடிகர் ஜேகே ரித்தீஷ் என்பவரை வைத்து கானல்நீர் எனும் படத்தை எடுத்தார்.

அதனைத் தொடர்ந்து 2010ஆம் ஆண்டு நீயே என் காதலி என்ற கடைசி படத்தை எடுத்திருந்தார். அவர் எடுத்த மூன்று படமும் சரியாக போகவில்லை. இதனால் சின்னி ஜெயந்த் ஒரு இயக்குனர் என்பதே பலருக்கும் தெரியவில்லை.

chinni-jayanth-cinemapettai-01
chinni-jayanth-cinemapettai-01

Trending News