வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

4 மொழிகளிலும் கோடி கோடியாய் கொட்டும் பணம்.. லேடி சூப்பர் ஸ்டாரை மலைத்து பார்க்கும் சினிமா உலகம்

தனது இடத்தை தக்கவைத்து கொள்ளுவதிலும், பணம் சம்பாதிப்பதிலும் சமார்த்தியமான நடிகை என்றால், அது மலையாளத்து மங்கை நயன்தாரா தான் என்கின்றனர் சினி உலகத்தினர். கதாநாயகியாக மட்டும் அல்லாமல, தங்கை வேடத்தையும் ஏற்று நடிக்க தயாராகி விட்டார் நயன்தாரா.

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நடிகை நயன்தாரா சமீபகாலமாக நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான நெற்றிக்கண் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.மேலும், விமர்சன ரீதியாகவும் நல்ல விமர்சனங்களையும் பெற்றுள்ளது.

வயதானாலும் இவருக்கான மார்க்கெட் மட்டும் குறையவேயில்லை. ஏறிக் கொண்டுதான் செல்கிறது. தற்போது தமிழில் இவரது காதலரும் இயக்குனருமான விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஹிந்தியில் தயாராகும் படம் ஒன்றில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

நாயகியாக மட்டுமே நடித்து வரும் நயன்தாரா தற்போது தெலுங்கு படம் ஒன்றில் தங்கையாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதுவும் தெலுங்கின் முன்னணி நடிகரான சிரஞ்சீவிக்கு தங்கையாக நடிகை நயன்தாரா நடிக்க உள்ளாராம்.

chiranjeevi-mohan raja-cinemapettai
chiranjeevi-mohan raja-cinemapettai

மலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்ற லூசிபர் படத்தை தற்போது தெலுங்கில் ரீமேக் செய்ய உள்ளனர். மலையாளத்தில் மோகன்லால் நடித்த கதாபாத்திரத்தில் தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்க உள்ளார். இப்படத்தில்தான் நடிகை நயன்தாரா சிரஞ்சீவிக்கு தங்கையாக நடிக்கிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் இப்படத்தில் நயன்தாராவுக்கு கணவராக நடிகர் சத்யதேவ் நடிக்கிறார் என்றும் தெரியவந்துள்ளது. தனக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடித்து வரும் நயன்தாரா தற்போது இந்த கதாபாத்திரத்தை தேர்வு செய்துள்ளது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.

Trending News