புதன்கிழமை, ஜனவரி 15, 2025

ரஜினிக்காக வந்து சண்டை போட்ட சிரஞ்சீவி.. 32 வருடங்கள் கழித்தும் மறக்காத சூப்பர் ஸ்டார்

தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அதேமாதிரி தெலுங்கில் சூப்பர் ஸ்டார் என்று பெயரெடுத்தவர் சிரஞ்சீவி. இவர்கள் இருவருக்கும் நீண்டகாலமாக நட்பு இருந்து வந்தது. சிரஞ்சீவி படித்தது எல்லாம் சென்னையில் உள்ள நடிப்பு பட்டறையில் தான்.

அதனால் இவர்களுக்குள் சிறு வயதிலிருந்தே ஒரு நல்ல நட்பு இருந்து வருகிறது. ரஜினி அக்கட தேசம் போனால் சிரஞ்சீவியை பார்க்காமல் வருவதே கிடையாது. அதேபோல்தான் சிரஞ்சீவியும். இந்நிலையில் சிரஞ்சீவி தன் கேரியரின் உச்சத்தில் இருக்கும்போது ரஜினிக்காக இங்கே வந்து ஒரு படம் நடித்து கொடுத்துவிட்டு போனார்.

ரஜினி, அமலா, ஸ்ரீவித்யா போன்றவர்கள் நடிப்பில், கடந்த 1989 ஆண்டு ராஜசேகர் இயக்கத்தில், இளையராஜா இசையில் வெளிவந்த படம் மாப்பிள்ளை. இந்த படத்திற்கு சிரஞ்சீவி ஒரு கெஸ்ட் ரோல் கதாபாத்திரத்தில் நடித்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணியது இந்தப் படத்தைத் தயாரித்த கீதா ஆர்ட்ஸ்.

கீதா ஆர்ட்ஸ் வேறு யாருமில்லை சிரஞ்சீவியின் மைத்துனர் புரோடக்சன் கம்பெனி. சிரஞ்சீவி, இந்தப் படத்திற்காக பிசியான இருந்த நேரத்தில் கூட ரஜினிக்காக வந்து மாப்பிள்ளை படத்தை நடித்துக் கொடுத்தார் சிரஞ்சீவி.

அந்தப்படத்தில் ரஜினி கல்யாண நேரத்தில் சிரஞ்சீவி வந்து ஒரு சண்டைக் காட்சியில் நடித்துக் கொடுத்துவிட்டுப் போனாராம். இதை 32 வருடங்கள் கழித்து ரஜினிக்கு நினைவு படுத்தி வருகிறார். இப்படி நெருங்கிய நண்பர்களாக இருக்கும் இவர்கள் இருவரும் தாங்கள் நடிக்கும் படங்களுக்கு என்ன வேண்டுமானாலும் செய்ய தயாராக இருப்பார்கள்.

அப்படித்தா சமீபத்தில் சிரஞ்சீவி மற்றும் அவருடைய மகன் ராம்சரண் நடிப்பில் வெளியான ஆச்சாரியார் திரைப்படம் பெரும் நஷ்டத்தை சந்தித்த நிலையில், ரஜினி ‘பாபா’ படத்திற்கு நஷ்டஈடு கொடுக்க முன் வந்தது போல, அவருடைய நண்பர் சிரஞ்சீவியும் தற்போது ஆச்சாரியார் படத்திற்காக அவருடைய சம்பத்தில் இருந்து 10 கோடி ரூபாயை இழப்பீடாக திருப்பிக் கொடுக்க முன்வந்துள்ளார்.

Trending News