சனிக்கிழமை, நவம்பர் 23, 2024

பட்ஜெட்டை விட 4 மடங்கு லாபம் பார்த்த சித்தா.. மரண அடி வாங்கிய லாரன்ஸ், ஜெயம் ரவி படம்

Chithha Movie:  பொதுவாகவே ஒரு படத்திற்கு எந்த மாதிரி பிரமோஷன் கொடுக்கிறார்களோ, அது பொருத்தே அந்த படத்தின் வெற்றி நிர்ணயிக்கப்படும் என்பது வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால் இதற்கு இடையில் ப்ரமோஷன் கொடுக்காத படங்களும் நல்ல கருத்துக்களால் மக்களிடம் எளிதாக வெற்றி அடைந்து விடும். அப்படித்தான் கடந்த வாரம் 28ஆம் தேதி வெளிவந்த சித்தா திரைப்படமும் மக்கள் கொண்டாடும் படமாக வரவேற்கப்பட்டு வருகிறது.

இயக்குனர் எஸ்.யு அருண்குமார் இயக்கத்தில் சித்தார்த் நடித்த திரைப்படம் தான் சித்தா. இப்படம் பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் வன்கொடுமையை தட்டிக் கேட்கும் விதமாக எடுக்கப்பட்டிருக்கும். அதாவது அண்ணன் இறந்த பிறகு அண்ணியையும், அவருடைய குழந்தையும் பாதுகாக்கும் பொறுப்பில் பொறுப்பான கொழுந்தனாக சித்தார்த் இந்த படத்தில் நடித்திருப்பார்.

Also read: சித்தார்த்திடம் மன்னிப்பு கேட்ட ஜெயிலர் நரசிம்மா.. ரஜினி செய்யாததை செய்து காட்டிய சிவராஜ்

இந்த கதைக்கு ஏற்ற மாதிரி முகத்தை அப்பாவியாக மாற்றிக்கொண்டு நடிப்புக்கு வலு சேர்த்து இருப்பார். இவருடைய நடிப்பும், கதையின் முக்கியத்துவமும் மக்களுக்கு பிடித்துப் போனதால் தொடர்ந்து இப்படத்திற்கு நல்ல விமர்சனங்களை கொடுத்து வருகிறார்கள். அந்த வகையில் இதற்கு போட்டியாக வெளிவந்த சந்திரமுகி 2 மற்றும் இறைவன் படம் மொக்கையான விமர்சனங்களை வாங்கி இருக்கிறது.

ஆரம்பத்தில் இந்த இரண்டு படங்களுக்கும் திரையரங்குகளில் அதிக ஸ்கிரீன் கொடுக்கப்பட்டு இருந்தது. ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு தற்போது ஓடாததால் ஸ்கிரீன் எண்ணிக்கை இந்த இரண்டு படங்களுக்கும் குறைந்துவிட்டது. அதற்கு பதிலாக குறைந்த பட்ஜெட்டில் நல்ல தரமான கதையை வைத்து எடுக்கப்பட்ட சித்தா படம் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.

Also read: போட்ட பட்ஜெட்டை எடுக்க முடியாமல் திணறும் சந்திரமுகி 2, இறைவன்.. 5வது நாள் முடிவில் செய்த வசூல்

இதிலிருந்து பெரிய படம், முன்னின நடிகர்கள் என்ற பிம்பம் உடைந்து நல்ல கதை நடிப்பு நன்றாக இருந்தால் மக்கள் வரவேற்க தயாராக இருக்கிறார்கள் என்பது தெரிகிறது. அதற்கு காரணம் சித்தா படம் வெறும் 3 கோடி பட்ஜெட்டில் மட்டுமே எடுக்கப்பட்டது. ஆனால் வெளிவந்த ஐந்து நாட்களுக்குள் நான்கு மடங்கு லாபத்தை பெற்று கிட்டத்தட்ட 13 கோடி வசூலை பெற்று வருகிறது.

இதனை தொடர்ந்து இந்த படத்திற்கு வரும் நல்ல விமர்சனங்களை அடுத்து இன்னும் அதிகமாகவே படம் மக்களிடம் ரீச்சடையும். அதன் மூலம் வசூல் அளவிலும் கல்லா கட்டப் போகிறது. இந்த படத்திற்கு மத்தியில் சந்திரமுகி 2 மற்றும் இறைவன் படம் அடி வாங்கி வசூல் அளவில் சராசரியான லாபத்தை மட்டும் பார்த்து வருகிறது.

Also read: பத்து பைசா கூட மூளையை செலவழிக்காத இறைவன் படக்குழு.. மொத்தமாக டேமேஜ் செய்த ப்ளூ சட்டை

- Advertisement -spot_img

Trending News