புதன்கிழமை, ஜனவரி 15, 2025

அரசியல் புள்ளியால் சித்ராவுக்கு ஏற்பட்ட டார்ச்சர்.. திசை திரும்பிய தற்கொலை வழக்கு

தற்போது எங்கு திரும்பினாலும் சின்னத்திரை நடிகை சித்ராவின் மரணம் பற்றிய செய்திதான் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. வாழ்க்கையில் எப்படியாவது முன்னேறி விட வேண்டும் என்ற எண்ணத்தில் கடுமையாக போராடிய சித்ரா திடீரென தன் வாழ்க்கையை முடித்துக் கொண்டது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அவருடைய மரணத்திற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டு வந்தாலும் தற்போது சித்ரா குறித்து வரும் பல செய்திகள் நம்மை திடுக்கிட வைக்கிறது. மேலும் அவர் மரணம் குறித்த பல கேள்விகளும் தற்போது எழுந்து வருகிறது. சித்ரா காதலித்து வந்த ஹேம்நாத்தை ஊரறிய நிச்சயதார்த்தம் செய்து கொண்ட பிறகு அவர் யாருக்கும் தெரியாமல் ஏன் ரகசியத் திருமணம் செய்ய வேண்டும் என்பதுதான் பலரின் கேள்வியாக இருக்கிறது.

இது ஒருபுறமிருக்க தற்போது ஹேம்நாத் சித்ராவின் மரணத்திற்கு அரசியல் புள்ளிகள் தான் காரணம் என்று கூறி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சித்ராவிற்கு என்னதான் நடந்தது என்று பலரும் விசாரிக்க ஆரம்பித்ததில் சில தகவல்கள் கிடைத்துள்ளது.

அதில் சித்ராவுக்கு மாஜி அமைச்சர் ஒருவர் பாலியல் டார்ச்சர் கொடுத்து வந்ததாகவும், அதனால் தான் அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் ஒரு கருத்து நிலவி வருகிறது. சின்னத்திரையில் விருது வழங்கும் நிகழ்ச்சி தொடர்பாக மாஜி அமைச்சர் ஒருவர் சித்ராவை எம்ஜிஆர் நகரில் இருக்கும் பிரபல ஹோட்டலில் சந்தித்துள்ளார்.

அப்போதிலிருந்தே அவருக்கு சித்ராவின் மீது ஒரு ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது. அதன் பிறகு அவர் சித்ராவுக்கு தொடர் டார்ச்சர் கொடுத்து வந்ததாகவும், அது மட்டுமல்லாமல் இன்னும் சிலர் இதில் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் ஹேம்நாத் போலீஸ் விசாரணையில் கூறியிருக்கிறார்.

இந்நிலையில் அந்த மாஜி அமைச்சர் சித்ரா தங்கியிருந்த அந்த சொகுசு விடுதிக்கு அவர் இறப்பதற்கு முன்பு வந்ததாகவும் சொல்லப்படுகிறது. இப்படி தொடர் டார்ச்சரால் தான் சித்ரா இப்படி ஒரு முடிவை எடுத்திருக்க வேண்டும் என்று ஒரு தகவல் நிலவுகிறது.

மேலும் மாஜி அமைச்சர் தான் ரவுடிகளை வைத்து சித்ராவை கொலை செய்திருக்கலாம் என்ற நோக்கிலும் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது. எது எப்படி இருந்தாலும் விடை தெரியாமல் மர்மமாக இருக்கும் இந்த சித்ராவின் கொலை வழக்கில் கூடிய விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும் என்று சித்ராவின் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Trending News