செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கை மிஞ்சும் சித்ராவின் வழக்கு.. பரபரப்பைக் கிளப்பிய ஆதாரம்!

தமிழ் சின்னத்திரையில் படிப்படியாக முன்னேறி, ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரின் மூலம் தமிழகத்தின் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானவர் தான்  VJ சித்ரா. இவர் கடந்த டிசம்பர் 9ஆம் தேதி பூந்தமல்லி அருகில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மேலும் சித்ராவின் மரணத்திற்கு காரணம் என்னவாக இருக்கும் என்று அவருடைய ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதோடு, சித்ராவின் தந்தை நசரத்பேட்டை காவல் நிலையத்தில், சித்ரா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக புகார் அளித்தார்.

அதேபோல் ஹேம்நாத்கும், சித்ராவிற்கும் கடந்த  அக்டோபர் மாதம் பதிவு திருமணம் நடந்ததால் இந்த வழக்கு ஆர்டிஓ விசாரணைக்கு அனுப்பப்பட்டது. இதனைத் தொடர்ந்து 10 நாட்களுக்கும் மேலாக ஸ்ரீபெரும்புதூரில் ஆர்டிஓ வாக பணியாற்றும் திவ்யஸ்ரீ, சித்ராவின் குடும்பத்தினர், நண்பர்கள், மாமியார், கணவர், மாமனார், சக நடிகர்கள், ஹோட்டல் உரிமையாளர், மற்றும் ஊழியர்கள் ஆகியோரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினார்.

இதற்குப் பிறகு விசாரணையின் அடிப்படையில் 16 பக்க அறிக்கையை தயார் செய்து அதனை காவல்துறையினரிடம் ஒப்படைத்தார் திவ்யஸ்ரீ. அந்த அறிக்கையில் பல திடுக்கிடும் தகவல்கள் ஏற்கனவே வெளியாகியிருந்தன.

இந்த நிலையில் சித்ராவின் வழக்கில் தற்போது மற்றுமொரு திடுக்கிடும் தகவல் வெளியாகி, பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

அதாவது சித்ரா தற்கொலை செய்து கொண்ட அன்று, போலீசார் அவருடைய ஹேண்ட் பேக்கை பரிசோதித்தனராம். அப்போது சித்ராவின் ஹேண்ட் பேக்கிலிருந்து 150 கிராம் கஞ்சாவையும், ஒரு கஞ்சா நிரப்பப்பட்ட சிகரெட்டும் போலீசார் கைப்பற்றியதாக சொல்லப்படுகிறது.

மேலும் சித்ராவின் மாமனார் ரவிச்சந்திரன், சில நாட்களுக்கு முன்பு  சென்னை மாநகர காவல் ஆணையரிடம் அளித்திருந்த புகார் மனுவில், சித்ராவிற்கு குடிப்பழக்கம் உண்டு என்று தெரிவித்திருந்தார். இவ்வாறிருக்க, தற்போது சித்ராவின் கைப்பையிலிருந்து கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

chitra
chitra

ஏற்கனவே பாலிவுட்டின் முன்னணி நடிகரான சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கிலும்  இதுபோன்ற போதைபொருள் பழக்கவழக்கம் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, அந்த வழக்கு போதைப்பொருள் தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டது. இதனால் தற்போது சித்ராவின் தற்கொலை வழக்கும் போதைப்பொருள் தடுப்பு பிரிவுக்கு திசை மாறியுள்ளது. இந்தத் தகவல்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருவதோடு, பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Trending News