சீயான் விக்ரம் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சீயான் 60 என்ற படம் உருவாகி வருகிறது. இதற்கு முன்பாக விக்ரம் மற்றும் அஜய் ஞானமுத்து கூட்டணியில் கோப்ரா என்ற திரைப்படம் மிக வேகமாக வளர்ந்து வந்தது.
ஆனால் இடையில் கொரானா சூழ்நிலை காரணமாக கோப்ரா படத்தின் படப்பிடிப்புகள் நடத்த முடியாமல் போனதை தொடர்ந்து தற்போது அடுத்தகட்ட படப்பிடிப்பை தொடங்குவதற்கான எந்த சாத்தியக்கூறுகளும் இல்லாமல் அப்படியே நிற்கிறது.
கோப்ரா படத்தின் மீதமுள்ள படப்பிடிப்புகளை வெளிநாட்டில் தான் நடத்த வேண்டும் என உறுதியாக இருக்கிறாராம் அஜய் ஞானமுத்து. அப்படி செய்யவில்லை என்றால் படத்தின் தரம் கெட்டு விடும் என்பதையும் தயாரிப்பாளருக்கு எடுத்துச் சொல்லியுள்ளார்.

அதிர்ஷ்டவசமாக விக்ரமின் அடுத்த இரண்டு படங்களையும் தயாரித்து வருவது விஜய்யின் மாஸ்டர் படத்தில் இணை தயாரிப்பாளராக இருந்த செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் லலித் குமார் என்பவர் தான்.
இதனால் விக்ரமிடம் இது பற்றிக் கூறியபோது சீயான் 60 படத்தை முதலில் வேகமாக எடுத்து முடித்து ரிலீஸ் செய்துவிடலாம் எனவும், கோப்ரா படத்தை பிறகு பார்த்துக் கொள்ளலாம் எனவும் கூறிவிட்டாராம்.

இதன் காரணமாக தற்போது கோப்ரா படத்திற்கு முன்னரே சீயான் 60 படம் வெளியாகிவிடும் என வலைப்பேச்சு நண்பர்கள் சமீபத்திய பேட்டியில் குறிப்பிட்டுள்ளனர். இதுபோக கௌதம் மேனன் மற்றும் விக்ரம் கூட்டணியில் உருவாகி வந்த துருவ நட்சத்திரம் படமும் இதே போன்று சில நாட்கள் படப்பிடிப்பு நடத்த முடியாமல் தடுமாறி வருவதும் குறிப்பிடத்தக்கது.