திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

அரைகுறை ஆடையில் போஸ் கொடுத்த தங்கலான் பட நடிகை.. ரசிச்சு ருசிச்சு போட்டோ எடுத்தது நம்ம சியானா!

சீயான் விக்ரம் நடிப்பில் சமீபகாலமாக வெளியான படங்கள் எதுவும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இப்போது பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை விக்ரம் பெரிதும் நம்பி உள்ளார். ஏனென்றால் பா ரஞ்சித்தின் படங்களுக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உள்ளது.

இந்த படத்தில் பார்வதி மற்றும் மாளவிகா மோகனன் இருவரும் நடித்து வருகிறார்கள். மேலும் இந்த படம் பழங்கால கதையை மையமாக வைத்து எடுக்க உள்ளது இவர்களின் கெட்டப்பை பார்த்து தெரிகிறது. மேலும் இந்த படம் விக்ரமுக்கு சிறந்த கம்பேக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read : செம கதை அமைந்தும் விக்ரமுக்கு ப்ளாப்பான 5 படங்கள்.. மணிரத்தினம் படம் கூட ஓடாத பரிதாபம்

தங்கலான் படத்தில் மாளவிகா மோகனனுக்கு முக்கியமான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளதாம். ரஜினியின் பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான இவர் மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். தனுஷ் நடிப்பில் வெளியான மாறன் படத்தில் நடித்திருந்தார்.

மாளவிகா மோகனனின் படங்களில் பெரிய அளவு வரவேற்பு இல்லை என்றாலும் ரசிகர்கள் ஏராளம். ஏனென்றால் அவரது சமூக வலைத்தளத்தில் வெளியிடும் கவர்ச்சி போட்டோவுக்கு எக்கச்சக்க ரசிகர்கள் உண்டு. இணையத்தையே அலறவிடும் அளவிற்கு போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

Also Read : படமே ஓடாத விக்ரமுக்கு இவ்வளவு சம்பளமா.. ஹிட் ஹீரோக்கள் கூட வாயை பிளக்கும் சம்பளம்

அந்த வகையில் சமீபத்தில் அரைகுறை ஆடையில் போஸ் கொடுத்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். அதுமட்டுமின்றி இந்த போட்டோவை ரசித்து ருசித்து சியான் விக்ரம் தான் எடுத்துள்ளாராம். இதை மாளவிகா மோகனனே தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இந்த புகைப்படத்தை எடுத்தது விக்ரம் என டேக் செய்துள்ளார்.

மேலும் சீயான் விக்ரமுக்கு நடிப்பை தாண்டி இவ்வளவு அழகாக போட்டோ எடுக்கும் திறமையும் உள்ளதா என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள். அதுமட்டுமின்றி இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும் தங்கலான் பட அப்டேட்டுக்காக ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.

அரைகுறை ஆடையில் போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்

malavika-mohanaan

Also Read : ஒரு கட்டத்தில் விக்ரமை தூக்கி விட்ட அஜித்.. இந்தப் படத்துக்கு பிறகு தான் கேரியர் டாப்ல வந்துச்சு

Trending News