வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சிய தயாரிப்பாளர்.. பயங்கர கோபத்தில் சீயான் விக்ரம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் சீயான் விக்ரமை பிரபல தயாரிப்பாளர் ஒருவர் நீண்ட காலமாக நம்பிக்கை கொடுத்து ஏமாற்றிய செய்தி வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது.

சமீபகாலமாக வெற்றிக்கு போராடிக்கொண்டிருக்கும் நடிகர்களில் மிக முக்கிய நடிகராக இருப்பவர் விக்ரம்(vikram). கடைசியாக விக்ரம் நடிப்பில் வெளியான அனைத்து படங்களுமே தோல்வியை சந்தித்துள்ளன.

இதனால் கோலிவுட்டில் எப்படியாவது ஒரு வெற்றியை கொடுத்தாக வேண்டும் என மெனக்கெட்டு வருகிறார். இன்னும் சில படங்கள் தோல்வி கொடுத்தால் நமக்கு வயதாகி விட்டதே என ஒதுக்கி விடுவார்கள் என்ற கவலையும் ஒரு பக்கம் அவரை வாட்டி வதைக்கிறது.

இந்த நேரத்தில்தான் விக்ரமுக்கு வரப்பிரசாதமாக அமைந்தது அஜய் ஞானமுத்து திரைப்படம். நடிப்புக்கு தீனி போடும் அளவுக்கு 7 கெட்டப்புகளில் நடித்து வந்த கோப்ரா திரைப்படம் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

ஆனால் கிளைமாக்ஸ் காட்சிகள் இன்னும் படமாக்கப்படாமல் படப்பிடிப்பு மொத்தமும் முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே சோகத்தில் இருக்கும் விக்ரமுக்கு மேலும் பிரச்சனையை கொடுக்கும் வகையில் கோப்ரா படத்தை நேரடியாக ஓடிடி தளத்திற்கு விற்பதில் ஆர்வம் காட்டி வருகிறாராம் படத்தின் தயாரிப்பாளர் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ லலித்குமார்.

மாஸ்டர் படத்தை தயாரித்தவரும் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. தியேட்டரில் ரிலீஸ் செய்து முதல் நாள் முதல் காட்சிக்கு வரும் மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தை காட்டினால் தானே தன்னுடைய மார்க்கெட் உயரும் என தன்னுடைய வட்டாரங்களில் புலம்பித் தள்ளுகிறார் சீயான் விக்ரம். ஆனால் தயாரிப்பாளரோ கோப்ரா படத்தை ஓடிடி தளத்திலும் சீயான் 60 படத்தை நேரடியாக தியேட்டரிலும் வெளியிட்டுக் கொள்ளலாம் என விக்ரமை சமாதானப்படுத்தி வருகிறாராம்.

cobra-cinemapettai
cobra-cinemapettai

Trending News