புதன்கிழமை, ஜனவரி 15, 2025

பொன்னியின் செல்வன் படத்திற்காக தீவிர வாள் பயிற்சியில் ஈடுபட்டுள்ள விக்ரம்.. வைரலாகும் வீடியோ

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான மணிரத்னம் தற்போது கல்கியின் நாவலான பொன்னியின் செல்வன் காவியத்தை பிரம்மாண்ட திரைப்படமாக உருவாக்கி வருகிறார். இரு பாகங்களாக உருவாகும் இப்படம் சுமார் 500 கோடி ரூபாயில் தயாராகிறது. இப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகின்றன.

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என 5 மொழிகளில் உருவாகும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தில் ஐஸ்வர்யா ராய், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், சரத்குமார் உள்ளிட்ட இந்தியாவின் முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

கொரோனா தொற்று காரணமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரி பகுதியில் தொடங்கியது. இதில் ஐஸ்வர்யா ராய், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி உள்ளிட்டோர் கலந்துக்கொண்டு நடித்து வருகின்றனர்.

70 சதவிகித படப்பிடிப்புகள் முடிவடைந்துள்ள நிலையில் இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டரை மட்டும் படக்குழு வெளியிட்டது. அதேபோன்று இப்படத்தின் சில புகைப்படங்களும் சமீபத்தில் வெளியாகி வைரலானது.

vikram-ponniyin-selvan
vikram-ponniyin-selvan

பொன்னியின் செல்வன் படத்தில் நடிகர் விக்ரம் ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவரின் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. இப்படத்திற்காக விக்ரம் தீவிர வாள் பயிற்சியில் ஈடுபட்டுள்ள அந்த வீடியோ அனைவரையும் கவர்ந்துள்ளது.

Trending News