நடிகர் விக்ரம் நடிப்பில் சமீபத்தில் வெளியான தங்களான் படம் எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை. அந்த படத்தை மலை போல நம்பி இருந்த சீயானுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
இதை தொடர்ந்து தோல்வியை நினைத்து துவண்டு போகாமல், அடுத்த படத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார்.
சமீபத்தில் விக்ரம் நடிப்பில் வீர தீர சூரன் படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் படத்தை மிகுந்த எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் எதிர்நோக்கி இருக்கிறார்கள்.
இப்படி இருக்க அடுத்ததாக மடோன் அஸ்வின் இயக்கத்தில் அடுத்த படத்தில் கமிட் ஆகியுள்ளார். மேலும் நல்ல கதைகளை பார்த்து பார்த்து தேர்வு செய்கிறார்.
சம்பளத்தை உயர்த்திய சீயான்..
பொதுவாக வேறு எந்த நடிகருக்கு சீயானுக்கு இருக்கும் loyal fans இல்லை என்றே கூறலாம். அதே நேரத்தில், மற்ற நடிகரின் ரசிகர்கள் கூட சீயான் போடும் கடின உழைப்பை பார்த்து, வியப்படைவார்கள்.
காரணம் அவர் போடும் உழைப்புக்கு ஏற்ற வரவேற்பு இதுவரை கிடைக்கவில்லை. தங்களான் படத்தில் மட்டும் தேவை இல்லாத வசனங்கள் இல்லாமல், திரைக்கதை சரியாக அமைந்திருந்தாலும் விக்ரமுக்கு ஆஸ்கார் விருதே கிடைத்திருக்கும்.
அந்த அளவுக்கு தரமாக நடித்திருக்கிறார். இவருக்கு பின்னால் வந்த நடிகர்கள் எல்லாம், சரியான கதைகளை தேர்வு செய்து நடித்து விட்டு, இவரை விட அதிக சம்பளம் வாங்கும்போது, இவருக்கு நிச்சயம் வருத்தமாக தான் இருக்கும்.
அது தான் தற்போது நடந்துள்ளது. பொதுவாக ஒரு படம் வெற்றி அடைந்தாள், அதற்க்கு பின் நடிகர்கள் சம்பளத்தை உயர்த்துவார்கள்.
ஆனால் தங்களான் படம் தோல்வியாக இருந்தும், தனது சம்பளத்தை பல மடங்கு உயர்த்தியுள்ளார் சீயான் விக்ரம்.
இதுவரை அவர் ஒரு படத்துக்கு 30 கோடி வாங்கி வந்த நிலையில், மடோன் அஸ்வின் இயக்கத்தில் அவர் நடிக்கும் புதிய படத்துக்கு 50 கோடி சம்பளம் வாங்கியுள்ளார்.
ஆனால் இந்த முறை ரசிகர்கள், இவர் சம்பள உயர்வை, நியாயம் என்றே கூறி வருகின்றனர். ஒவ்வொரு படத்துக்கும் விக்ரம் போடும் உழைப்புக்கு அவர் வாங்கும் சம்பளம் கம்மி.
ஒரு சீனியர் நடிகர் அதுவும் ஒவ்வொரு காட்சியிலும் மெனக்கிட்டு நடிப்பவர் தாராளாமாக கேட்கலாம் என்று தான் கருத்து தெரிவித்து வருகின்றனர்.