Director Mani Ratnam: தமிழ் சினிமாவில் மணிரத்தினம் இயக்கிய படங்கள் சூப்பர் ஹிட் ஆவது மட்டுமல்லாமல் அவருடைய படத்தில் நடித்த நடிகர்களும் புகழின் உச்சத்துக்கு சென்று விடுவார்கள் அப்படிப்பட்ட படங்களில் ஒன்றுதான் 1991இல் வெளியான தளபதி.
இந்த படத்தில் கோலிவுட் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் மோலிவுட் சூப்பர் ஸ்டார் மம்முட்டி இருவரும் இணைந்து நடித்தனர். இந்த படத்தில் கலெக்டர் ஆக நடிகர் அரவிந்த்சாமி கச்சிதமாக நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இருப்பினும் தளபதி படத்தில் அரவிந்த்சாமிக்கு கிடைக்காத மவுசு மணிரத்தினம் இயக்கத்தில் அடுத்தடுத்து நடித்த இரண்டு படங்களின் மூலம் கிடைத்தது.
Also Read: ஹீரோவுக்கு பண வாசனை காட்டாத தந்தை.. மணிரத்னத்திற்கு நோ சொன்ன கோடீஸ்வர அப்பா
தொடக்கத்தில் அரவிந்த்சாமி நடிக்க வந்த பொழுது, யாருடா இந்த பையன் இவ்வளவு ஸ்மார்ட்டா இருக்கிறான் என்று டைரக்டர்களையும், தயாரிப்பாளர்களையும் தன்னை பற்றி பேச வைத்தார். என்னதான் தளபதி படத்திலிருந்து வெயிட்டான கதாபாத்திரம் அவருக்கு கொடுத்தாலும் அந்த சமயம் ரசிகைகளின் கவனத்தைப் பெறவில்லை..
அரவிந்த்சாமி திட்டமிட்டு சாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் எல்லாம் சினிமாவிற்குள் நுழையவில்லை. தந்தை திரைத்துறையில் இருந்ததால் அதன் மூலம் அவருக்கு தளபதி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் சும்மா டைம் பாஸ் ஆக நடிக்க வந்த ஹீரோ அரவிந்த்சாமி நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். அப்போதுதான் அவருக்கு ஒரு பிரேக் வந்தது.
அதன்பின் அவர் ஹீரோவாக நடித்த முதல் படமே வேற லெவலுக்கு ஹிட் ஆனது. அந்தப் படம் தான் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான ரோஜா. இந்த படத்திற்கு பிறகு மறுபடியும் மீண்டும் மணிரத்தினத்தின் இயக்கத்தில் பம்பாய் என்ற மற்றொரு ஹிட் படத்தையும் கொடுத்தார்.
இவ்வாறு இவர் நடித்த இந்த இரண்டு படங்களுக்கும் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலிலும் தாறுமாறானவசூலையும் பெற்றது. அது மட்டுமல்ல ரோஜா மற்றும் பம்பாய் போன்ற இரண்டு படங்களுக்கும் தேசிய விருதும் கிடைத்தது. குறிப்பாக மணிரத்னத்தின் இந்த இரண்டு படத்தினால் அரவிந்த்சாமி பெண் ரசிகைகளை தன் வசம் ஆக்கி சாக்லேட் பாயாக வலம் வந்தார்.