வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

செகண்ட் இன்னிங்ஸை காப்பாற்ற போராடும் சாக்லேட் பாய்.. கார்த்தியுடன் களம் இறங்கும் வில்லன்

Actor Karthi : சாக்லேட் பாயாக சினிமாவில் வலம் வரும் நடிகர்கள் சில காலம் மட்டும்தான் நீடிக்க முடிகிறது. அதன் பிறகு பல நடிகர்கள் சினிமாவில் காணாமல் போய் உள்ளனர். மேலும் சிலர் கிடைக்கும் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். முதலில் ஹீரோவாக கலக்கி வந்த சாக்லேட் பாய் நடிகர் ஒருவர் செகண்ட் இன்னிங்ஸில் பட்டையை கிளப்பினார்.

அதாவது அதிகப்பெண் ரசிகர்களைக் கொண்ட அரவிந்த்சாமி மார்க்கெட் இழந்த பிறகு வில்லனாக நடிக்க ஆரம்பித்தார். அதுவும் தனி ஒருவன் படம் அரவிந்த்சாமியை வேறு ஒரு உயரத்திற்கு அழைத்துச் சென்றது. இதைத் தொடர்ந்து அவருக்கு வில்லன் பட வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தது.

ஆனால் சமீபகாலமாக அரவிந்த்சாமி மீது நிறைய குற்றச்சாட்டுகள் வந்த வண்ணம் இருக்கிறது. அரவிந்த்சாமியால் நிறைய படங்கள் ரிலீஸ் ஆகாமல் தாமதமாகி கொண்டிருக்கிறதாம். சரியாக டப்பிங் பேச வருவதில்லை என்று கூறப்படுகிறது. செகண்ட் இன்னிங்ஸில் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்த்த நிலையில் நிலைமை அப்படியே தலைகீழாக மாறிவிட்டது.

Also Read : வந்திய தேவனுக்கு ஜோடியாகும் விஜய் டிவி பைங்கிளி.. கொஞ்ச நெஞ்ச டிஆர்பியும் போச்சு

இப்போது கடந்த ஓராண்டாக அவரது படங்கள் வெளியாகாத நிலையில் மீண்டும் வழிக்க வந்திருக்கிறார். அதாவது பிரேம்குமார் இயக்கத்தில் கார்த்தி, விஜய் டிவி ஈரமான ரோஜாவே 2 சீரியல் நடிகை சுவாதி ஆகியோர் நடிப்பில் மெய் அழகன் என்ற படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் கார்த்திக்கு வில்லனாக அரவிந்த்சாமி நடிக்கிறார்.

மேலும் இப்படியே விட்டால் செகண்ட் இன்னிங்ஸ் போய்விடும் என்ற பயத்தில் மீண்டும் படங்களில் கவனம் செலுத்த அரவிந்த்சாமி முடிவெடுத்திருக்கிறார். கிடப்பில் கிடக்கும் அரவிந்த்சாமியின் படத்திற்கு இப்போது டப்பிங் பேசவும் ஆரம்பித்திருக்கிறார். விரைவில் அவரது படங்கள் அடுத்தடுத்து வெளியாகும்.

Also Read : தயாரிப்பாளர்களை முக்காடு போட வைத்த கார்த்தியின் 5 படங்கள்.. தலையில் அடித்து புலம்ப வைத்த படம்

Trending News