செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

60 படங்களில் நடித்தும் 15 படம் கூட வெற்றி காணாத நடன இயக்குனர்.. புதுசா வெளிவந்து ட்ரெய்லரால் அதிர்ந்து போன திரையுலகம்

Dance Master: பன்முக திறமை கொண்டவராய் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் போன்ற மொழி படங்களில் சிறந்த நடன இயக்குனராய் கலக்கி வருபவர் பிரபுதேவா. இந்நிலையில் 60 படங்களில் நடித்தும் 15 படம் கூட வெற்றி காணாத சம்பவம் குறித்த தகவலை இங்கு காண்போம்.

நடன இயக்குனராய் இவர் மேற்கொண்ட எண்ணற்ற படங்கள் வெற்றியை பெற்றிருக்கிறது. அவ்வாறு உலக அளவில் இவரது படைப்பு பெரிதாய் பார்க்கப்பட்டது. இருப்பினும் டான்ஸராய் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் எதிர்பாராமல் முன்னணி கதாநாயகனாய் மாறிவிட்டார்.

Also Read: குடும்ப மானத்தை கூறு போட்டு விற்கும் மருமகள்கள்.. வீட்டுக்குள்ள சேர்த்ததே தப்பு என நினைக்கும் மூர்த்தி

அவ்வாறு இவர் நடிப்பில் இந்து, காதலன், ராசையா, லவ் பேர்ட்ஸ், ரோமியோ, மின்சார கனவு போன்ற படங்கள் வெற்றியை கண்டு இருக்கிறது. அதிலும் குறிப்பாக நகைச்சுவையை நிறைந்த நடிப்பினை வெளிக்காட்டி மக்களிடையே நல்ல விமர்சனத்தை பெற்றார்.

மேலும் 2003ல் எங்கள் அண்ணா படத்தில் இவரது நகைச்சுவை நல்ல வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து இவர் மேற்பட்ட எந்த படமும் வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆகையால் நடிகராய் வேலைக்காகவில்லை என இயக்குனராய் களம் இறங்கினார்.

Also Read: 24 வருடத்திற்கு முன் விட்ட சபதத்தை நிறைவேற்றிய ரம்யா கிருஷ்ணன்.. கல்யாணத்தில் முடிந்த லட்சியம்

இவர் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த போக்கிரி படம் மாபெரும் வெற்றியை சந்தித்தது. அதை தொடர்ந்து ஹிந்தியில் பல படங்களை தொடர்ந்து இயக்கி, இந்தியா லெவலில் வெற்றியை பெற்றார். அவ்வாறு டான்ஸர் ஆகவும், இயக்குனராகவும் பட்டைய கிளப்பிய இவர் நடிகராய் முயற்சிக்கும் படங்கள் எல்லாமே தொடர் தோல்வியை சந்தித்து வருகிறது.

மேலும் குடும்ப ரீதியாய் பல பிரச்சினைகளை சந்தித்து சர்ச்சைக்கு ஆளான இவர் இயக்குவதிலும் தடை, நடப்பதிலும் தடை போடப்பட்டது. மேலும் அதிக பாடல்களுக்கு டான்ஸ் அமைத்து கொடுப்பதும் இல்லை. அவ்வாறு கெட்ட நேரம் பிடித்தது போன்று தொடங்கும் முயற்சி எல்லாம் தோல்வியாகவே முடிந்து வருகிறது. தற்பொழுது வினோ வெங்கடேஷ் இயக்கத்தில் வுல்ஃப் என்னும் படத்தில் நடித்து வருகிறார்.

புது பரிமாணம் ஏற்கும் பிரபுதேவாவின் வுல்ஃப் டீசர் இதோ!

Trending News