தனுஷ், சிவகார்திகேயனுக்கு நடுவே கடைசி 5 வருடத்தில் நடந்த மிகப்பெரிய வசூல் போட்டி.. ஜெயிச்சது யார் தெரியுமா?

Dhanush: கடைசி ஐந்து வருடத்தில் தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயனுக்கு நடுவே ஒரு மிகப்பெரிய வசூல் போட்டி சைலன்டாக நடந்து வந்து கொண்டிருக்கிறது. இது சம்பந்தப்பட்ட தரவுகள் இணையதளத்தில் பெரிய அளவில் வைரல் ஆகிக்கொண்டிருக்கிறது. இது குறித்து பார்க்கலாம்.

ஜெயிச்சது யார் தெரியுமா?

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு மிகப்பெரிய இண்டஸ்ட்ரியல் ஹிட் கொடுத்த படம் என்றால் அது டாக்டர். இந்த படம் 72 கோடி வசூல் செய்தது. அதே நேரத்தில் தனுஷின் கர்ணன் படம் 51 கோடி வசூல் செய்தது.

இருந்தாலும் கர்ணன் கொரோனா லாக்டவுனுக்கு பிறகு தியேட்டரில் ரிலீஸ் ஆன முதல் படம், அதனால் அந்த நேரத்தில் இந்த வசூல் பெரிய அளவில் பேசப்பட்டது.

சிவகார்த்திகேயனின் டான் படம் 87 கோடி வசூல் செய்திருந்த நிலையில் தனுஷின் திருச்சிற்றம்பலம் 66 கோடி தான் வசூல் செய்தது. பிரின்ஸ் படம் சிவகார்த்திகேயனுக்கு 27 கோடி லாபத்தை கொடுத்து இருந்த நிலையில் நானே வருவேன் தனுஷுக்கு 26 கோடி லாபத்தை கொடுத்தது.

சிவகார்த்திகேயனின் மாவீரன் படம் 52 கோடி வசூல் செய்திருந்த நிலையில் தனுஷ் நடித்த வாத்தி படம் 36 கோடி வசூலித்தது. சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அயலான் படம் 60 கோடி வசூல் செய்திருந்த நிலையில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே ரிலீஸ் ஆனா தனுஷின் கேப்டன் மில்லர் 36 கோடி தான் வசூலித்தது.

சிவகார்த்திகேயனை முதல் கட்ட நாயகனாக நகர்த்திய அமரன் படம் 160 கோடி வசூல் செய்திருந்த நிலையில் தனுஷ் இயக்கி நடித்த ராயன் படம் 81 கோடி வசூலித்தது. தற்போது தனுஷ் நடிப்பில் ரிலீஸ் ஆகி இருக்கும் குபேரா படம் இதுவரை 16 கோடி வசூல் செய்திருக்கிறது.

வசூல் விஷயத்தில் தனுஷை விட சிவகார்த்திகேயன் முதன்மையாக தான் இருக்கிறார். இருப்பினும் தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் இருவரையும் ஒரே நேரத்தில் போட்டியாளராக ஒப்பிடுவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம்.

தனுஷ் தேர்ந்தெடுத்து நடிக்கும் கதைக்களம் வேறு, சிவகார்த்திகேயன் தேர்ந்தெடுக்கும் கதைகள் வேறு. மேலும் தனுஷ் தமிழ் சினிமாவை தாண்டி ஹாலிவுட் வரை தன்னுடைய திறமையை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோ என்ற வட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறார்.