1. Home
  2. சினிமா செய்திகள்

பான் இந்தியா இயக்குனராகும் மாரி செல்வராஜ்.. பிரபலம் பகிர்ந்த புது தகவல், பைசன் ரிலீஸ்க்கு அப்புறம் பாக்கலாம்!

பான் இந்தியா இயக்குனராகும் மாரி செல்வராஜ்.. பிரபலம் பகிர்ந்த புது தகவல், பைசன் ரிலீஸ்க்கு அப்புறம் பாக்கலாம்!

Mari Selvaraj: இயக்குனர் மாரி செல்வராஜ் பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய இயக்குனர். இதை தொடர்ந்து வெளியான வாழை, மாமன்னன் போன்ற படங்களும் மாரி செல்வராஜை தமிழ் சினிமாவில் அடுத்த கட்ட இயக்குனராக நகர்த்தி இருக்கிறது.

பான் இந்தியா இயக்குனராகும் மாரி செல்வராஜ்

மாரி செல்வராஜ் தங்க மீன்கள் படைய இயக்குனர் ராம் இடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். சமீபத்தில் இயக்குனர் ராம் மாரி செல்வராஜை பற்றி யாருமே எதிர்பார்க்காத ஒரு விஷயத்தை பகிர்ந்திருக்கிறார். அதாவது மாரி செல்வராஜிற்கு பான் இந்தியா படம் இயக்கும் அளவுக்கு திறமை இருக்கிறது.

விரைவில் ஷாருக்கான் அல்லது சல்மான்கான் வைத்து அவர் ஒரு படம் பண்ணுவார். நான் அந்த செட்டுக்கு போய் அந்த இருவரில் ஒருவருடன் செல்பி எடுத்துக் கொண்டாலே எனக்கு போதும். என் சிஷ்யனுக்கு அந்த அளவுக்கு திறமை இருக்கிறது என்று பாராட்டி இருக்கிறார்.

மேலும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தற்போது துருவ் விக்ரம் நடித்து வரும் பைசன் படத்தைப் பற்றியும் ராம் பேசியிருக்கிறார். எல்லோருமே வாழை திரைப்படத்தை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். நான் பைசன் படத்தை பார்த்து விட்டேன். இந்த படம் வாழையை விட பல மடங்கு சிறந்த படம் என பேசி எதிர்பார்ப்பை எகிற விட்டிருக்கிறார்.

Cinemapettai Team
Arun

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.