போலீசில் சிக்கிய அர்ஜுன்.. உடனே நடந்த தரமான சம்பவம்
தென்னிந்தியாவில் “ஆக்ஷன் கிங்” என்ற பட்டத்தை பல ஆண்டுகளாக தக்க வைத்திருக்கும் நடிகர் அர்ஜுன், சமீபத்தில் அளித்த பேட்டியில் தனது வாழ்க்கைப் பயணத்தையும், ரசிகர்கள் அளிக்கும் அன்பையும் பகிர்ந்து கொண்டார். தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் நீண்ட காலம் நடித்து வரும் அவர், சினிமா உலகம் தந்த மரியாதை குறித்து நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.
அர்ஜுன் கூறியதாவது, பல தடவைகள் கார் ஓட்டிக்கொண்டிருக்கும்போது போலீசார் routine checking-க்கு தடுத்திருக்கிறார்கள். ஆனால் கண்ணாடியைத் திறந்தவுடன் அவர் முகத்தை பார்த்த போலீசார் உடனே மன்னிப்பு கேட்டுவிட்டு, “சார்! உங்களைத் தெரியாம நிறுத்திட்டோம். நீங்க போங்க சார்” என்று மரியாதையுடன் அனுப்பி வைப்பார்கள் என தெரிவித்தார்.
அவர் மேலும் பகிர்ந்த தகவலில், “நிறைய இளைஞர்கள் என்னை சந்திக்கும் போது, உங்களைப் பார்த்து தான் போலீஸ் ஆக வேண்டும் என்று கனவு வந்தது என்று சொல்வார்கள். அதேபோல், இராணுவத்தினர் கூட என்னிடம் வந்து, உங்கள் படங்களைப் பார்த்துதான் ராணுவ சேவையில் சேர வேண்டும் என்று முடிவு செய்தோம் எனச் சொல்வது மிகப் பெரிய பெருமையைக் கொடுக்கும்” என்று உணர்ச்சியுடன் கூறினார்.
தேசப்பற்று கதைகளில் நடித்த படங்களுக்கு கிடைத்த எதிரொலியே தனது வாழ்க்கையில் மிகச் சிறப்பான அனுபவங்களில் ஒன்றாக இருந்ததாகவும் அர்ஜுன் குறிப்பிட்டார். “இத்தனை பேருக்கு என் படங்கள் ஒரு ஊக்கமாக இருந்தது என்றால், அதைவிட மகிழ்ச்சி என்ன இருக்க முடியும்? தேசத்திற்கான அன்பை பேசும் படங்களில் நடித்தது என் career-ல ஒரு பெரிய honour” என அவர் பெருமிதத்துடன் கூறினார்.
பல வருடங்களாக கவர்ந்துவரும் அர்ஜுன், தனது வாழ்வில் கிடைத்த இந்த மரியாதைகளும், மக்களின் அன்பும் தான் தனது தொடர்ந்த உழைப்புக்கு முக்கிய காரணம் எனவும் பகிர்ந்து கொண்டார். அவரது பேட்டி, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று, சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி வருகிறது.
