2028 வரை தனுஷ் படு பிசி.. கை வசம் இருக்கும் 9 வெற்றி இயக்குனர்களின் படங்கள், 2 பையோபிக் வேற!

Dhanush: கொடுக்குற தெய்வம் கூரைய பிச்சிட்டு கொடுக்கும் என்று சொல்வார்கள். இப்படித்தான் தனுசுக்கு பட வாய்ப்புகள் மலைபோல் குவிந்து கிடக்கின்றன . சமீபத்தில் தான் அவர் நடித்த குபேரா ரிலீஸ் ஆகி நல்ல விமர்சனங்களையும், வசூலையும் பெற்று வருகிறது.

இதை நின்று கொண்டாடும் அளவுக்கு கூட தனுஷ் நேரமில்லாமல் இருக்கிறார். கிட்டத்தட்ட 2028 வரை வேறு எந்த படங்களிலும் புக் ஆகாத அளவுக்கு மொத்தம் பதினோரு படங்கள் வரிசை கட்டி காத்திருக்கிறது. இதில் இட்லி கடை மற்றும் அவர் நடித்துக் கொண்டிருக்கும் பாலிவுட் படம் அடுத்தடுத்து ரிலீசுக்கு தயாராகி விட்டது.

கேட்கும் கதைகளை எல்லாம் ஓகே சொல்லி தனுஷ் கமிட் ஆகிவிட்டார் என்றெல்லாம் ஈசியாக நினைத்து விட முடியாது. அவர் அடுத்தடுத்து ஒப்பந்தமாகி இருக்கும் இயக்குனர்களின் பெயரை கேட்டால் நமக்கே மெய்சிலித்து விடும்.

சரத்குமார் மற்றும் விக்னேஷ் சிவனை வைத்து மிகப்பெரிய வெற்றி படத்தை கொடுத்த இயக்குனர் விக்னேஷ் ராஜாவுடன் இணைகிறார். இதை தொடர்ந்து லவ்வர் பந்து என்ற எதார்த்த பட இயக்குனர் தமிழரசன் பச்சை முத்துவுடன் படம் பண்ண இருக்கிறார்

அமரன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி மற்றும் மாரி செல்வராஜ் இருவரும் அடுத்தடுத்த லிஸ்டில் இருக்கிறார்கள். தனுஷின் வெற்றி இயக்குனர் வெற்றிமாறன் உடன் இணைந்து வடசென்னை இரண்டாம் பாகத்தில் நடிக்க இருக்கிறார்.

விஜய் நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் ஜனநாயகன் படத்திற்கு பிறகு எச் வினோத் தனுசுக்கு கதை எழுத இருக்கிறார். அதேபோன்று விஜய் சேதுபதி என் ஐம்பதாவது படத்தை மிகப்பெரிய வெற்றிப்படமாக மாற்றிய இயக்குனர் நித்திலன் தனுசு உடன் இணைய இருக்கிறார். இது மட்டும் இல்லாமல் அப்துல் கலாம் மற்றும் இசைஞானி இளையராஜாவின் பயோ பிக் படங்களிலும் கமிட் ஆகி இருக்கிறார்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →