1. Home
  2. சினிமா செய்திகள்

சிக்கலில் AK64... அஜித் படத்துக்கு புதிய தடங்கல்!

ajith-ak64

அஜித் நடிக்கும் ஏகே 64படம் குறித்த தகவல்கள் ரசிகர்களிடையே எப்போதும் பெரிய ஆர்வத்தை ஏற்படுத்துகின்றன. தற்போது ஏகே 64 படத்துக்கு மீண்டும் ஒரு புதிய சிக்கல் உருவாகி உள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.


அஜித் படங்கள் தொடர்பான எந்த தகவலும் வந்தாலே அது வைரலாகும். அந்த வகையில், சில வாரங்கள் முன்பு ரோமியோ பிக்சர்ஸ் ராகுல்  அஜித்தின் தீவிர ரசிகராக கருதப்படும் இவர் – ஏகே 64 தயாரிப்பாளராக இருப்பார் என்பது பரவலாக பேசப்பட்டது. ரசிகர்களும் தொழில்துறை வட்டாரங்களும் இந்த தகவலை மிகுந்த உற்சாகத்துடன் ஏற்றனர்.

ரசிகர் பாயிண்ட் ஆஃப் வியூவில் பார்த்தால், ஒரு “அஜித் ரசிகன் தயாரிப்பாளன்” என்ற கோணம் ஒரு தனி உற்சாகத்தைக் கொடுத்தது. "பட்ஜெட்டுக்கும் கம்ப்ரமைஸ் இருக்காது, ரசிகர்கள் விரும்பும் ஸ்கேலிலும் படம் இருக்கும்" என்ற பெரிய நம்பிக்கை உருவானது.

ஆனால் இந்த உற்சாகம் நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. சமீபத்திய தகவலின்படி, பட்ஜெட் காரணமாக ராகுல் இந்த படத்தில் இருந்து விலகியிருக்கலாம் என்று பேசப்படுகிறது. திட்டமிடப்பட்ட அளவுக்கு முதலீட்டை ரெடி செய்ய முடியாத நிலை, படத்தின் ஸ்கேல் மிகவும் பெரியதாக இருப்பது, அஜித் படமாக இருப்பதால் தொழில்நுட்ப தரத்துக்கு கூடுதல் செலவுகள் தேவைப்படுவது, இவற்றின் காரணமாக ராகுல் விலகியதாக கூறப்படுகிறது.

வட்டார தகவலின்படி, பட்ஜெட் தயார் செய்ய முடியாத நிலை உருவாகியதால், அஜித் வேறு தயாரிப்பாளரைத் தேர்வு செய்யும் நிலைக்கு வந்துள்ளார். பட்ஜெட் பிரச்சனை தொடர்ந்து இருந்தால், அவர் நேரடியாக மாற்றம் செய்ய முடிவு செய்திருக்கிறார் என்று கூறப்படுகிறது. இது முழுவதும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படாத தகவல்களாக இருந்தாலும், தொழில்நுட்ப வட்டாரங்களில் இது பசங்க பேசும் ஹாட் டாபிக்காக மாறியுள்ளது.

தயாரிப்பாளர் பக்கம் மாற்றம் உறுதியானால், சில நாட்களில் அல்லது சில வாரங்களில் அஜித் டீமிலிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதுவரை, ரசிகர்கள் காத்திருக்கும் நிலைதான்.

ஏகே 64 படம் குறித்த விவரங்கள் அதிகாரப்பூர்வமாக தெரியாத நிலை ரசிகர்களை குழப்பத்தில் உறைய வைத்தாலும், அஜித் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் ரசிகர்களை ஏமாற்றாத வகையில் இருக்கும் என்பதில் நம்பிக்கை உண்டு. தயாரிப்பாளர் மாற்றம், பட்ஜெட் விவாதம் போன்றவை தமிழ் சினிமாவில் புதிதல்ல. ஆனால், அஜித் போன்ற நட்சத்திரம் நடிக்கும் படம் என்பதால் எதிர்பார்ப்புகள் அதிகம்.

எனவே, அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை, பொறுமையாகவும் உற்சாகத்துடனும் காத்திருக்க வேண்டியது ரசிகர்கள் செய்ய வேண்டிய ஒன்றே.

Cinemapettai Team
Thenmozhi R

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.