உயிரே போனாலும் அதை செய்வேன்! உண்மையை உரக்கச் சொன்ன AK

"அஜித் – ஒரு நடிகரின் சிந்தனைக்கும், சமூகப் பொறுப்புக்கும் இடையில்!" சமீபத்திய பேட்டியில் தல அஜித் கூறிய முக்கிய கருத்துகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
சமீபத்தில் தனியார் தொலைக்காட்சிக்கு அஜித் அளித்த பேட்டி மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது எதனால் என்பதை ஒவ்வொன்றாக பார்க்கலாம்.
போலி சமூக ஆர்வலர்கள் குறித்து கடும் பேச்சு!
"சில சமூகங்கள் சரண்டப்பட்டு துன்புறுத்தலுக்குள்ளாகின்றன. அதே சமயம், மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்க அரசியல்வாதிகளும், தலைவர்களும் இருக்கின்றனர். ஆனா சில போலி சமூக ஆர்வலர்களும் இருக்கிறார்கள். அவர்கள் காரணமாக மக்களின் நம்பிக்கை பாதிக்கப்படுகிறது," என அவர் கூறினார். இதனால் சமூக ஊடகங்களில் பெரிய விவாதம் எழுந்துள்ளது.
“ஒரு நபர் மட்டும் காரணமில்லை” - கரூர் சம்பவம் பற்றி விளக்கம்
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து - “ஒரு நபர் மட்டும் காரணமில்லை. இது நம்முடைய அனைவரின் பொறுப்பும் தான். நாமெல்லாரும் சுயமாக Civics Sense கற்று, மற்றவரை மதிக்க கற்றுக்கொள்ளணும்” என அஜித் தெளிவாகக் கூறினார். இதன் மூலம் அவர் எந்த ஒருவரையும் குறிவைக்காமல், சமூக ஒற்றுமையை வலியுறுத்தினார்.
எனக்கு பிடித்த பாதையில்... நான்!
ரேசிங் குறித்து - “படங்களை Influence பண்ண எனக்குப் பிடிக்காது. ரேசிங் எனது உயிர். அதனால் தான் நான் அதைத் தொடர்கிறேன்,” என அஜித் சொன்னார். திரையுலகப் புகழிலும், தனிப்பட்ட விருப்பத்திலும் சமநிலையைப் பேணும் அவரின் பார்வை ரசிகர்களை கவர்ந்தது.
“20 ஆண்டுகளுக்குப் பிறகு பேசம் பேட்டி”
“சில ஊடகங்கள் என்னை சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. நாமும் ஒரு சமூகம் மாதிரி மாறணும். ஒருநாள், என்னை சரியாக புரிந்து, மக்கள் பேசுவார்கள் என நம்புகிறேன்,” என அவர் நிதானமாகச் சொன்னார். அவரின் இந்த நம்பிக்கை, அவர் எப்போதும் அமைதியான வழியில் செயல்படுகிறாரென்பதை காட்டுகிறது.
அஜித் - சினிமாவை தாண்டிய சிந்தனை!
இந்த பேட்டி முழுக்க, ஒரு நடிகர் மட்டுமல்லாமல், பொறுப்புள்ள குடிமகனாக அஜித்தின் மனநிலையை வெளிப்படுத்துகிறது.அவரது வார்த்தைகள் - “வெறும் பேச்சு அல்ல, ஒரு தலைமுறையை சிந்திக்க வைக்கும் வகையில் இருந்தது” என ரசிகர்கள் கூறுகின்றனர்.
நாட்டுக்காக உயிரே போனாலும் பரவாயில்லை!
அஜித் கூறுகிறார் - “கார் ரேசிங் சாதித்து, இந்த மாதிரியான நாட்டிற்கும் பெருமை சேர்ப்பேன் என நம்புகிறேன். என் நாட்டிற்காக என் உயிரே போனாலும் பரவாயில்லை.” இந்த ஒரு வரியிலேயே அவரது தேசிய உணர்வும், நம்பிக்கையும் வெளிப்படுகிறது. திரைமறைவில் மட்டும் இல்லாமல், திரைக்கு வெளியிலும் ஒரு பொறுப்புள்ள குடிமகனாக இருப்பதை அவர் மீண்டும் நிரூபித்திருக்கிறார்.

