துணிவுடன் களமிறங்கும் அஜித்: ஆதிக் இயக்கும் AK64 படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்
நடிகர் அஜித் குமார் நடிப்பில் கடந்த ஏப்ரலில் வெளியான 'Good Bad Ugly' திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து, சுமார் ஒன்பது மாதங்கள் நடிப்புக்கு இடைவெளி கொடுத்து, மோட்டார் ஸ்போர்ட்ஸில் ஆர்வம் செலுத்தி வந்த அஜித், தற்போது மீண்டும் சினிமா பணிகளில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார்.
தயாரிப்புப் பணிகள் நிறைவு!
இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் மற்றும் அஜித்குமார் இணையும் புதிய படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது வரும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், படக்குழு தரப்பிலிருந்து முக்கியமான அப்டேட் வெளியாகியுள்ளது.
இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், இந்தப் புதிய படத்தின் முன் தயாரிப்புப் பணிகள் (Pre-production) கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார். அஜித் படத்துக்கான ஸ்க்ரிப்ட், லொக்கேஷன் தேர்வு உள்ளிட்ட முக்கிய வேலைகள் நிறைவு பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
படப்பிடிப்பு தொடங்கும் நாள்
மேலும், ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் ஒரு கூடுதல் தகவலையும் அவர் பகிர்ந்துள்ளார். இந்தப் படத்தின் பிரம்மாண்டமான படப்பிடிப்பு வரும் பிப்ரவரி மாத இறுதியில் தொடங்க வாய்ப்புள்ளதாகவும், அதிகாரபூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் நியூ இயர் (Jan 1) அன்று படத்தின் டைட்டில் டீசர் வெளிவர இருக்கிறது. பொங்கல் First Look போஸ்டர் வெளிவர இருக்கிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு அஜித் மீண்டும் களமிறங்குவது ரசிகர்களுக்குப் பெரும் கொண்டாட்டமாக மாறியுள்ளது.
