ரிலீஸ் தேதியுடன் சுடச்சுட வெளிவந்த அரசன் பட அப்டேட்.. மிரட்டலான Comeback கொடுக்கும் STR

Thug life படத்திற்குப் பின் ரொம்ப நாளாக சிம்பு-வை திரையில் பார்ப்பதற்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். தற்போது வெற்றிமாறனுடன் அரசன் படத்தில் இணைந்துள்ள சிம்பு மிரட்டலான லுக் மற்றும் நடிப்புத் திறமையை காட்ட தயாராக உள்ளார்.
சிலம்பரசன் TR ரசிகர்கள் நீண்டநாள் காத்திருந்த ‘ARASAN’ படத்தின் படப்பிடிப்பு குறித்து முக்கிய தகவல் வந்துள்ளது. செம்ம மாஸ், செம்ம ஆக்ஷன் - STR மீண்டும் ஒரு ஜொலிக்கும் கதாபாத்திரத்தில் ரசிகர்களை கலக்கத் தயாராகிறார்.
இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நவம்பர் 24ஆம் தேதி துவங்குகிறது. சென்னை புறநகர் பகுதிகளில் நடைபெறும் இந்த schedule, முழுக்க முழுக்க ஆக்ஷன் சீன்களால் நிரம்பி இருக்கும் என படக்குழுவே தெரிவித்துள்ளது. STR-க்கு ஏற்ப, படத்தின் ஆரம்பத்திலேயே “high voltage action” வைத்திருப்பது ரசிகர்களை இன்னும் அதிகம் எதிர்பார்க்க வைத்திருக்கிறது.
முதல் கட்டத்தில் சிம்பு, சமுத்திரக்கனி, கிஷோர் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். மூவருமே சக்திவாய்ந்த நடிப்புக்குப் பெயர்பெற்றவர்கள் என்பதால், இந்தக் காட்சி தொகுப்புகள் படத்திற்கு பெரிய strength ஆக இருக்கும். குறிப்பாக STR–சமுத்திரக்கனி கூட்டணி இந்த முறை என்ன தீயை பறக்க விடப் போகிறது என்பதை ரசிகர்கள் ஆர்வத்துடன் கவனித்து வருகின்றனர்.
இதற்கிடையில், படத்திற்கான நாயகி தேர்வு இன்னும் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த படத்தில் இரண்டு நாயகிகள் இருப்பதாக முன்பே கூறப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் படத்தின் இரண்டாவது schedule-ல் குழுவுடன் சேர இருக்கின்றனர். கேரக்டர் அடிப்படையிலான கதையாதலால், இரண்டு நாயகிகளுக்கும் முக்கியமான ஸ்கோப் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் முக்கியமாக, ஆண்ட்ரியா ஜெரெமியாவும் இயக்குனர் நெல்சன் அவர்களும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர். கேரக்டருக்கு ஏற்ற தன்னம்பிக்கையும் தீவிரமும் கொண்ட ஆண்ட்ரியா, படத்தில் எந்த shade-ல் வரப் போகிறார் என்பது தற்போது ரசிகர்களிடையே பெரிய விவாதமாகி வருகிறது.
மொத்தத்தில், ‘ARASAN’ STR-க்கு ஒரு mass comeback ஆக இருக்கும் என்று முன்கூட்டியே சொல்லலாம். ஆக்ஷன், பெரிய கலைஞர்கள் கூட்டணி, சஸ்பென்ஸ் நிறைந்த கதைக்களம் - எல்லாமும் சேர்ந்து சிம்புவின் அடுத்த படத்தை ரசிகர்களுக்கே அல்லாமல் கோலிவுட் வட்டாரத்துக்கும் மிகப்பெரிய expectations-க்கு கொண்டு செல்கிறது. 2026 தீபாவளிக்கு அரசன் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

