அட்லீ ஹீரோவை தொக்கா தூக்கிய லோகேஷ்.. அடுத்த 1000 கோடி வசூல் கன்பார்ம்
தென்னிந்திய சினிமாவின் மிக அதிகமாக பேச்சாகும் பெயர்கள் என்றால் - லோகீஷ் கனகராஜ் மற்றும் அல்லு அர்ஜுன். இருவரும் தனித்தயாராகவே பாக்ஸ் ஆபிஸ் ராட்சசர்கள். இந்த இருவரும் ஒன்றாக இணையும் வாய்ப்பு இருப்பதாக தற்போது டோலிவுட் + கோலிவுட் வட்டாரங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தகவல்களின் படி, லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஒரு கதையைப் பகிர்ந்திருக்கிறார். அந்த கதை LK7 ஆகுமா? அல்லது அவர் நீண்டநாளாக உருவாக்கவுள்ள Kaithi 2 வா? என்பதே ரசிகர்களிடையே பெரிய கேள்வி. இத்தகவல் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை என்றாலும், இந்த கூட்டணி உருவானாலே ரசிகர்களுக்கு அது ஒரு கொண்டாட்டம் தான்.
அல்லு அர்ஜுன் சமீபத்தில் தனது கேரியரை மிக ஸ்மார்ட்டாகத் திட்டமிட்டு நடத்தி வருகிறார். புஷ்பாவின் உலக வெற்றிக்குப் பின், எந்த படத்தையும் தேர்வு செய்வதில் அவர் மிகவும் கவனமாக இருக்கிறார். தற்போது அவர் நடித்து வரும் அடுத்தத் திரைப்படம் - அட்லீ இயக்கும் Parallel Universe கான்செப்ட்டில் உருவாகும் மாபெரும் படைப்பு.
இப்படத்தின் பட்ஜெட், காட்சியமைப்பு, கதாபாத்திர வலிமை எல்லாம் மிகப் பெரிய அளவில் அமைந்துள்ளதால், இது அல்லு அர்ஜுனின் கேரியரில் இனியொரு மைல்கல்லாக அமையும். இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் நிலையில், அடுத்த லைன்-அப்பில் லோகீஷ் சேர்ந்துவிடலாம் என்பதே தற்போது பெரிய பஸ்.
லோகேஷ் கனகராஜ் ஓர் இயக்குநர் மட்டுமல்ல; LCU Universe உருவாக்கியவர். அவரின் ஸ்டைல், ஆக்ஷன் டிசைன், எட்ஜ்-ஆப்-தி-சீட் டென்ஷன் - allu arjun-ன் ஸ்டைலும் எனர்ஜியும் சேர்ந்துவந்தால், அது தென்னிந்திய சினிமாவுக்கு ஒரு நியூ-ஜெனரேஷன் ஆக்ஷன் யூனிவர்ஸ் உருவாக்க வாய்ப்பு அதிகம்.
இந்த கூட்டணி உண்மையாக நடக்கிறதா என்பதை ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானால் அது டோலிவுட் + கோலிவுட் கலக்கும் மிகப்பெரிய பான்-இந்தியா சென்சேஷன் ஆகும். லோகேஷின் திரை உலகமும், அல்லு அர்ஜுனின் கெரிசுமாவும் சேர்ந்துவந்தால், இந்திய சினிமா மற்றொரு லெவல் செல்வது நிச்சயம்! எனவே கூலி படத்தில் வசூல் ரீதியாக நெகடிவ் விமர்சனங்களை பெற்ற லோகேஷ் அல்லு அர்ஜுன் காம்போவில் 1000 கோடி வசூலை தொடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
