1. Home
  2. சினிமா செய்திகள்

முடக்க நினைப்பவர்களுக்கு தனுஷ் கொடுத்த பதிலடி.. பரப்பப்பட்ட வதந்தியால் டென்ஷனான அசுரன்

முடக்க நினைப்பவர்களுக்கு தனுஷ் கொடுத்த பதிலடி.. பரப்பப்பட்ட வதந்தியால் டென்ஷனான அசுரன்

தனுஷ் வர வர சூட்டிங் ஸ்பாட்டில் ஓவர் அராஜகம் செய்கிறார் என்ற பேச்சுக்கள் அடிபட்டது. ஒரு பெரும் படையினரோடு தான் படப்பிடிப்பு தளத்துக்கு வருகிறார். இவரால் தயாரிப்பாளர்களுக்கு பெரிய நஷ்டம் என்றெல்லாம் இவர் மீது அவதூறு பரப்பினார்கள்.

இப்பொழுது அதற்கெல்லாம் தனுஷ் பதிலடி கொடுத்துள்ளார். சுமார் 22 ஆட்களோடு சூட்டிங் ஸ்பாட்டிற்கு வருகிறார். இதில் அரை டசன் ஜிம் பாய்ஸ், தனுசுக்கு தேவையான சாப்பாடுகளை சமைப்பதற்கு சமயக்காரர்கள், காஸ்டியூம் டிசைனர், மேக் அப் மேன் போன்றவர்களுடன் வருகிறார்.

தனுஷிடம் காஸ்டியூம் டிசைனராக வேலை செய்பவருக்கு அசிஸ்டன்ட் என இந்த பட்டியல் நீண்டு கொண்டே போகிறதாம். இதனால்இதற்கென்றே தனியாக தயாரிப்பாளர் தரப்பிலிருந்து ஒரு பெரிய பட்ஜெட்டை ஒதுக்க வேண்டும் என்றெல்லாம் பேச்சுக்கள் அடிபட்டது.

தனுசு இப்படி பெரும் கூட்டத்தோடு வருவதால் அத்தனை பேருக்கும் தயாரிப்பாளர் தான் சம்பளம் கொடுக்க வேண்டும். தனுஷ் செய்யும் இந்த செயல் ஞாயமா, என அவரைப் பற்றி ஏகப்பட்ட அவதூறுகள் சமீப காலமாக பரவி வருகிறது.

இதற்கெல்லாம் தனுஷ் பதிலடி கொடுத்து வருகிறார். தனுஷ் தன்னுடன் வருபவர்கள் இப்பொழுதுதான் இரண்டு நாட்களாக வருகிறார் என்றும், அவர்கள் மருத்துவ சம்பந்தப்பட்ட சம்பந்தமான ஆட்கள் என்றும், தனக்கு பிசியோ, டயட் என குறைபாடுகளை போக்க வந்தவர்கள் என்றும் பதில் கொடுத்துள்ளார். மேலும் பிசியோதெரபிஸ்ட்கெல்லாம் தனுஷ் தான் சம்பளம் கொடுக்கிறாராம்

மேலும் இட்லி கடை படத்தின் ரீ ரெகார்டிங் வேலைகளும் அங்கே தான் மொபைல் ரெக்கார்டிங் செய்யப்படுகிறது, இதனால்தான் இவ்வளவு கூட்டம் தான் சந்திக்க நேர்கிறது என்றும் இதற்கு விளக்கம் தெரிவித்துள்ளது.ஏற்கனவே தன்னை ஒடுக்க நினைக்கிறார்கள் என குபேரன் மேடையில் தனுஷ் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Cinemapettai Team
Thenmozhi

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.