ரஜினிக்காக சிவகார்த்திகேயனை விட்டுக்கொடுத்தாரா? இயக்குநரை மாற்றிய மர்மம்!
ரஜினிகாந்தின் தலைவர் 173 மற்றும் சிவகார்த்திகேயனின் அடுத்த படம் குறித்த அதிரடி மாற்றங்கள் கோலிவுட்டில் பேசுபொருளாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் தற்போது டாப் ஹீரோக்களின் படங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி வருகின்றன. அந்த வகையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் 'பிரின்ஸ்' சிவகார்த்திகேயன் ஆகியோரின் அடுத்தடுத்த படங்கள் குறித்த ஒரு புதிய தகவல் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
முதலில் சிவகார்த்திகேயனின் 'SK 24' படத்தை 'டான்' பட புகழ் இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்குவதாக இருந்தது. இதற்கிடையில், ரஜினிகாந்தின் 173-வது படத்தை இயக்கும் பொன்னான வாய்ப்பு சிபிக்கு கிடைத்துள்ளதாகத் தெரிகிறது. இதனால் 'தலைவர் 173' படத்தின் பணிகளில் அவர் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். ராஜ் கமல் பிலிம்ஸ் சார்பாக கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகும்.
மறுபுறம், கடந்த ஆண்டு வெளியாகி விமர்சன ரீதியாக மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற 'பார்க்கிங்' (Parking) படத்தின் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன், தனது அடுத்த கதைக்காக சிவகார்த்திகேயனை அணுகியுள்ளார்.
கதை பிடித்துப் போகவே, சிபி சக்ரவர்த்திக்கு பதிலாக ராம்குமார் பாலகிருஷ்ணன் இப்போது சிவகார்த்திகேயனின் 'SK 24' படத்தை இயக்க அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
சிபி சக்ரவர்த்தி ஏற்கனவே ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் என்பதால், தலைவருக்காக அவர் ஒரு மாஸான ஸ்கிரிப்டை உருவாக்கியிருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், எதார்த்தமான திரைக்கதைக்கு பெயர்போன ராம்குமார் பாலகிருஷ்ணன் மற்றும் சிவகார்த்திகேயன் கூட்டணி அமைவது ஒரு புதிய ரக சினிமாவைக் கொடுக்கும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த 'டைரக்டர் எக்ஸ்சேஞ்ச்' முறை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில், 2026-ம் ஆண்டு கோலிவுட்டில் இரண்டு மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம். இது குறித்த முறையான அறிவிப்பு தயாரிப்பு நிறுவனங்களிடமிருந்து விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.
