1. Home
  2. ஓடிடி

மோசமான விமர்சனம் இருந்தும் ‘Dude’ எப்படிச் சூப்பர் ஹிட்? காரணம் தெரியுமா?

மோசமான விமர்சனம் இருந்தும் ‘Dude’ எப்படிச் சூப்பர் ஹிட்? காரணம் தெரியுமா?

தமிழ் சினிமா பாக்ஸ் ஆபிஸில் சில நேரங்களில் logic வேலை செய்யாது. அதற்கு சான்றுதான் பிரதீப் ரங்கநாதனின் “Dude”. ரிவ்யூஸ் மிக்ஸ்டாக இருந்தாலும், படம் பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்துக் கொண்டிருக்கிறது. இதை பார்த்த ரசிகர்களும் trade circle-லும் ஒரே கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். “எப்படி possible?” ஆனா இதுக்குப் பின்னால solid காரணங்களும் marketing strategyயும் இருக்கு.

முதலாவது காரணம் - பிரதீப் ரங்கநாதனின் marketing & production support. இவர் தற்போது பெரிய தயாரிப்பு நிறுவனங்களோடு இணைந்து வேலை செய்கிறார். அந்த production houses அவரது potential-ஐ மிகச்சிறப்பாகப் பயன்படுத்தி, release timing-லிருந்து promotional reach வரை அனைத்தையும் perfect-ஆ execute பண்ணுகிறார்கள். “Dude” வெளியான date, festival crowdக்கு match ஆகும் வகையில் தேர்ந்தெடுக்கப்பட்டது. அதனால் negative review வந்தாலும், theatre occupancy steady-ஆ இருக்கு.

இரண்டாவது காரணம் - பிரதீப்பின் past success impact. “Love Today” படத்தின் அபாரமான வரவேற்பு, அவரை ஒரு youth-icon ஆக்கி விட்டது. ரசிகர்களுக்கு அவர் மீது நம்பிக்கை வந்துவிட்டது. அதனால் “படம் average ஆனாலும் பிரதீப்பின் style enjoy பண்ணலாம்” என்ற feel உருவாகி விட்டது. இதுதான் repeat audience-ஐ உருவாக்குது. இப்போ அவர் ஒரு 50 கோடி range assured opening actor-ஆக மாறி இருக்கிறார். எந்த subject ஆனாலும், crowd curiosity build பண்ணும் நிலை.

மூன்றாவது - audience connection & social media pull. பிரதீப் ரங்கநாதனின் dialogues, mannerisms, memes இவை எல்லாம் digital crowdல virality கொடுக்குது. “Dude” பாக்ஸ் ஆபிஸ் collections-க்கு theatre reviews மட்டும் காரணமல்ல; reels, memes, reaction clips கூட audience curiosity create பண்ணுது. அந்த curiosity தான் first-weekend crowd-ஐ நிலைப்படுத்துது.

ஆனா இதே success forever guarantee இல்லை என்பதையும் trade experts குறிப்பிடுகிறார்கள். அவர்கள் சொல்கிறார்கள், “பிரதீப் ரங்கநாதன் இப்போ safe zoneல இருக்கிறார், ஆனா இரண்டு மூன்று தொடர்ச்சியான flop வந்தால் அவர் market damage ஆகும்.” இது #HiphopTamizha மற்றும் #Kavin ஆகியோரின் recent career patternக்கு ஒத்திருக்கிறது. ஒரே ஒரு movie failure அல்ல; continues dip in freshness தான் actor market-ஐ பாதிக்கும். அதே formula பிரதீப்புக்கும் பொருந்தும்.

அடுத்ததாக அவர் செய்கிற #LIK project தான் அவரது next critical test. அந்த படம் content-ஆகவும் presentation-ஆகவும் வேறுபட்டதாக இல்லாவிட்டால், அது அவர் “mass pull” graph-ஐ slow down செய்யக்கூடும். ஆனா ரசிகர்கள் இன்னும் positive moodல இருக்கிறார்கள் அவர்களின் நம்பிக்கை எளிதில் குறையாது.