1. Home
  2. சினிமா செய்திகள்

பிக் பாஸ் ரெட் கார்டு விவகாரம்.. மகாநதி சீரியலில் இருந்து கம்ருதீன் நீக்கமா?

kamurudin-mahanadhi

பிக் பாஸ் சீசன் 9ல் இருந்து ரெட் கார்டு பெற்று வெளியேறிய கம்ருதீன், தற்போது அவர் நடித்து வந்த 'மகாநதி' சீரியலில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளதாக வெளியாகும் தகவல் சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


விஜய் டிவியின் முன்னணி சீரியல்களில் ஒன்றான மகாநதி தொடரின் மூலம் இல்லத்தரசிகள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் கம்ருதீன். அந்த புகழின் மூலம் அவருக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்புதான் பிக் பாஸ் சீசன் 8. விறுவிறுப்பாக சென்றுகொண்டிருந்த இந்த சீசனில், 85 நாட்களைக் கடந்து ஒரு வலுவான போட்டியாளராக வலம் வந்தார் கம்ருதீன்.

சமீபத்தில் பிக் பாஸ் வீட்டில் சக போட்டியாளரான சாண்ட்ராவிடம், கம்ருதீன் மற்றும் பார்வதி இருவரும் நடந்து கொண்ட விதம் எல்லை மீறியதாகக் கருதப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பிக் பாஸ் வரலாற்றில் ஒரு முக்கிய திருப்பமாக இருவருக்கும் ஒரே நேரத்தில் 'ரெட் கார்டு' வழங்கப்பட்டு உடனடியாக வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர். இது அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வரும் புதிய தகவல் என்னவென்றால், பிக் பாஸ் வீட்டில் கம்ருதீனின் செயல்பாடுகள் மற்றும் அவரது நற்பெயருக்கு ஏற்பட்ட பாதிப்பு காரணமாக, அவர் நடித்து வந்த 'மகாநதி' சீரியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஒரு நடிகரின் நிஜ வாழ்க்கை பிம்பம் அவர் நடிக்கும் கதாபாத்திரத்தைப் பாதிக்கக்கூடாது என்பதற்காக சீரியல் குழு இந்த முடிவை எடுத்திருக்கலாம் என கிசுகிசுக்கப்படுகிறது.

இருப்பினும், இந்த தகவல் குறித்து மகாநதி சீரியல் தயாரிப்பு தரப்பிலிருந்தோ அல்லது கம்ருதீன் தரப்பிலிருந்தோ இன்னும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகவில்லை.

பொதுவாக பிக் பாஸ் சென்றவர்கள் மீண்டும் தங்கள் சீரியல் பணிகளுக்குத் திரும்புவது வழக்கம். ஆனால், ரெட் கார்டு புகாரில் வெளியேறியுள்ளதால் கம்ருதீன் விஷயத்தில் என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Cinemapettai Team
Thenmozhi R

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.