இளையராஜா கடந்த ஐந்தாறு ஆண்டுகளாகவே போட்டு பார்த்துருவோம் என்ற முடிவில் இருக்கிறார். பணம், புகழ் என எல்லாத்துக்கும் பஞ்சம் இல்லாத ராஜாவாக திகழ்பவர், சமீப காலமாக நடந்து கொள்ளும் விதம் எல்லாரையும் எரிச்சல் அடைய வைக்கிறது.
கோயில் குளம் என்று சுற்றி வரும் இளையராஜா அங்கே ஆண்டவருக்காக பலதரப்பட்ட வசதிகளை செய்து வருகிறார். ஆனால் சில விஷயங்களில் பாரபட்சம் பார்க்காமல் உரிமை கொண்டாடி அனைவரிடமும் மல்லு கட்டி வருகிறார்.
எஸ்பிபி இடம் பெருசு கொடுத்த குடைச்சல்:
அவர் போட்ட பாடல்களுக்காக சமீபகாலமாக அவர் போர் கொடி பிடித்து வருகிறார். ஒரு காலத்தில் எஸ் பி பாலசுப்ரமணியம் தன் பாடல்களை அனுமதியின்றி மேடையில் பாடுகிறார் என்று பிரச்சனையை கொஞ்சம் கொஞ்சமாக ஆரம்பித்தவர் இன்று அதற்காக விஸ்வரூபம் எடுத்து வருகிறார்.

சமீபத்தில் நிறைய படங்களில் இவர் பாடங்களை பயன்படுத்துகிறார்கள். குறிப்பாக லோகேஷ் கனகராஜ் கூலி படத்தில் இவர் பாடலை பயன்படுத்தியதற்காக உண்டு இல்லை என்று செய்துவிட்டார். நோட்டீஸ் மேல் நோட்டீஸ் அனுப்பி அவர்களுக்கு டார்ச்சர் கொடுத்து வந்தார்.
அஜித் வரை சென்ற பஞ்சாயத்து:
அதற்கு முன்னரே அஜித்தின் குட் பேட் அக்லி படத்தில் இவர் பாடலை பயன்படுத்தி உள்ளனர். இந்த படத்தில் மூன்று பாடல்களை தன்னுடைய அனுமதி இல்லாமல் பயன்படுத்தியுள்ளார்கள் என கேஸ் போட்டு அதற்கு நஷ்ட ஈடும் கேட்டார்.
இந்த பிரச்சனை பூதாகரமாக வெடிக்கவே குட்பேட் அக்லி படத்தை வாங்கிய netflix அந்த படத்தை தன்னுடைய பிளாட்பார்மிலிருந்து நீக்கிவிட்டது. இதனால் அவர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஆனால் குட்பேட் அக்லி டீம் இந்த பாடலின் உரிமைகளை வாங்கி விட்டதாக கூறி வந்தனர்.
மைதிலி மூவி மேக்கர்ஸ்க்கு பிடித்த தலைவலி:
இந்த படத்தை தயாரித்த மைதிலி மூவி மேக்கர்ஸ் அஜித் இடம் இப்பொழுது டீல் பேசி வருகிறார்கள். இந்த படத்தால் தங்களுக்கு சுமார் 70 கோடி நஷ்டம் ஏற்பட்டு விட்டதாகவும். அதனால் தங்கள் நிறுவனத்திற்கு மற்றும் ஒரு படம் நடித்து தருமாறு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.