1. Home
  2. சினிமா செய்திகள்

குழந்தை பிறப்பு குறித்து மனம் திறந்த இந்திரஜா: விமர்சனங்களுக்கு அதிரடி பதில்!

indraja shankar

நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரின் மகளான இந்திரஜா சங்கர் 2024ஆம் ஆண்டு மிக விமர்சையாக திருமணம் செய்து கொண்டார். தனது உறவினரான கார்த்திக் என்பவரை காதலித்து அவர் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு இந்த தம்பதியருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு “நட்சத்திரம்” என்று பெயர் வைத்துள்ளனர்.

திருமணமும் குழந்தை பிறப்பும் தொடர்பாக சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்ததாக இந்திரஜா சமீபத்திய பேட்டியில் பகிர்ந்துள்ளார். சிலர் தேவையில்லாத குற்றச்சாட்டுகளை முன்வைத்து தன்னை மனவேதனைக்குள்ளாக்கியதாகவும் அவர் கூறினார்.

Galatta Pink யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், தனது திருமணத்தைப் பற்றி தொடர்ந்து பலரும் விமர்சித்து வருவதாக இந்திரஜா தெரிவித்தார். குறிப்பாக குழந்தை பிறப்பு குறித்து பல தவறான தகவல்கள் பரப்பப்பட்டதாகவும் அவர் கூறினார்.

சிலர் Surrogacy அல்லது Test Tube Baby முறையில்தான் குழந்தை பெற்றதாக கூறியதாகவும், இயற்கையாக கர்ப்பமாகவில்லை என்று குற்றம்சாட்டியதாகவும் அவர் கூறினார். மேலும், மார்ச் மாதத்தில் திருமணம் நடந்த நிலையில் இவ்வளவு சீக்கிரம் கர்ப்பமாக முடியாது என பலர் விமர்சித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

அத்தகைய விமர்சனங்களுக்கு பதிலளித்த இந்திரஜா, “நான் இயற்கையாகவே கர்ப்பமானேன். இது ஒரு இயல்பான அறிவியல் செயல்முறை. இதைப் பற்றி புரிதல் இல்லாமல் சிலர் பேசுவது வருத்தமாக இருக்கிறது. குழந்தை பிறப்பது கடவுள் தரும் ஒரு வரம்” என்று அவர் கூறினார்.

கர்ப்பகாலத்தில் பெரிய பிரச்சனைகள் எதுவும் இல்லாமல் இருந்தாலும், கடைசி நேரத்தில் சிசேரியன் ஆபரேஷன் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டதாக அவர் கூறினார். குழந்தை பிறந்த செய்தியை கேட்டபோது மகிழ்ச்சியில் அழுததாகவும், பின்னர் எழுந்து நிற்கும்போது ஏற்பட்ட வலி மிகவும் கடினமாக இருந்ததாகவும் தெரிவித்தார். நார்மல் டெலிவரி ஆக இருந்தாலும் அல்லது சிசேரியன் ஆக இருந்தாலும், தாய்மை என்பது பெண்கள் அனுபவிக்கும் மிகப்பெரிய தியாகம் என அவர் உணர்ச்சியுடன் பகிர்ந்தார்.

Cinemapettai Team
Vijay V

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.